முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாரூர் மாவட்டத்திற்குட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் : மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் வெளியிட்டார்

செவ்வாய்க்கிழமை, 3 அக்டோபர் 2017      திருவாரூர்

 

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருவாரூர் மாவட்டத்திற்குட்பட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் வெளியிட்டார்.

 வாக்காளர் பட்டியல்

 பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது....

01.01.2018-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு திருவாரூர் மாவட்டத்திலுள்ள 166-திருத்துறைப்பூண்டி, 167-மன்னார்குடி,168-திருவாரூர்,169-நன்னிலம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 166-திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 199 ஆண் வாக்காளர்களும்,1 லட்சத்து 17 ஆயிரத்து 87 பெண் வாக்காளர்களும்,2 இதர வாக்காளர்களும் மொத்தம் 2 லட்சத்து 31 ஆயிரத்து 288 வாக்காளர்களும்,167-மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 337 ஆண் வாக்காளர்களும்,1 லட்சத்து 27 ஆயிரத்து 892 பெண் வாக்காளர்களும் , 5 இதர வாக்காளர்களும் மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரத்து 234 வாக்காளர்களும், 168-திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 732 ஆண் வாக்காளர்களும்,1 லட்சத்து 33 ஆயிரத்து 807 பெண் வாக்காளர்களும்,17 இதர வாக்காளர்களும் மொத்தம் 2 லட்சத்து 63 ஆயிரத்து 556 வாக்காளர்களும்,169- நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 646 ஆண் வாக்காளர்களும்,1 லட்சத்து 29 ஆயிரத்து 907 பெண் வாக்காளர்களும் , 5 இதர வாக்காளர்களும் மொத்தம் 2 லட்சத்து 61 ஆயிரத்து 558 வாக்காளர்களும் ஆக மொத்தம் 4 லட்சத்து 97 ஆயிரத்து 914 ஆண் வாக்காளர்களும்,5 லட்சத்து 8 ஆயிரத்து 693 பெண் வாக்காளர்களும்,29 இதர வாக்காளர்களும் ஆக மொத்தம் 10 லட்சத்து 6 ஆயிரத்து 636 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியல்கள் திருவாரூர்,மன்னார்குடி, வருவாய் கோட்ட அலுவலகங்களிலும்,அனைத்து வட்ட அலுவலகங்களிலும், அனைத்து நகராட்சி அலுவலகங்களிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் அதே போல 1152 வாக்குச்சாவடி மையங்களிலும் தொடர்புடைய பாகங்களின் வாக்காளர் பட்டியல்கள் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். 7.10.2017, 21.10.2017 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள கிராமசபா கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.8.10.2017 ,22.10.2017 ஆகிய நாட்களில் வாக்குச் சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

18 வயது நிறைவடைந்து இதுநாள்வரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்களும், 1.10.2018 அன்று 18 வயது நிறைவடைய உள்ளவர்களும், அதாவது 31.12.1999-க்கு முன்னர் பிறந்தவர்களும் தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு படிவம்-6-ஐ பெற்று அதனை பூர்த்தி செய்து விண்ணப்ப படிவத்துடன் மார்பளவு வண்ண நிழற்படம், வயதுக்கான ஆதாரம், இருப்பிடத்திற்கான ஆதாரம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.வாக்காளரது பெயரினை நீக்கம் செய்வதற்கு படிவம் 7-லும், திருத்தம் செய்வதற்கு படிவம்-8லும் , ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் இடமாற்றம் செய்வதற்கு படிவம் 8யு-லும் அந்தந்த வாக்குச்சாவடி மைங்களில் இதற்கென நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலரிடம் 03.10.2017 முதல் 31.10.2017 வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் 8.10.2017 ,22.10.2017 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும்.சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் காலை 9.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரை விண்ணப்பங்கள் பெறப்படும்.

 வாக்காளர் பட்டியல்களை வலை தளத்திலும் காணலாம். மேலும் வலைதளத்தில் வாக்காளர் சேர்த்தல, நீக்கல், திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் க.சக்திமணி, வருவாய் கோட்டாட்சியர் முத்துமீனாட்சி, செல்வசுரபி , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜகோபால் , தேர்தல் வட்டாட்சியர் சொக்கநாதன் மற்றும் அரசு அலுவலர்கள். அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து