முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி

சனிக்கிழமை, 7 அக்டோபர் 2017      சினிமா
Image Unavailable

சென்னை, சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:-

* மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் அதிகபட்சம் ரூ.150 ரூபாயும், குறைந்தபட்சம் ரூ.15 டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

* தற்போது ரூ.120-ஆக உள்ள டிக்கெட் கட்டணம் ரூ.150-ஆகவும், ரூ.95-ஆக உள்ள டிக்கெட் கட்டணம் ரூ.118.80-ஆகவும், ரூ.85ஆக உள்ள டிக்கெட் கட்டணம் ரூ.106.30-ஆகவும், ரூ.10-ஆக உள்ள டிக்கெட் விலை ரூ.15-ஆகவும் நிர்ணயம் செய்ய அனுமதி. வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சினிமா தியேட்டர்களுக்கு கடந்த 27-ந்தேதி முதல் தமிழக அரசு உள்ளாட்சி வரி விதித்துள்ளது. ஏற்கனவே ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் உள்ளாட்சி வரியும் விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த இரட்டை வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கேளிக்கை வரியை முவதுமாக ரத்து செய்ய வலுயுறுத்தி புதிய படங்களை திரையிடுவது இல்லை என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து