முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாவட்ட செஸ் விளையாட்டு போட்டி: நகரஆய்வாளர் நாகராஜன் பரிசளிப்பு

வியாழக்கிழமை, 19 அக்டோபர் 2017      வேலூர்
Image Unavailable

மாவட்ட அளவிலான செஸ் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்;களுக்கு அரக்கோணம் நகர காவல் ஆய்வாளர் கே.நாகராஜன் பரிசளித்து பாராட்டி பேசினார். இது குறித்து விவரம் வருமாறு. வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகரில் மாவட்ட அளவிலான செஸ் விளையாட்டு போட்டிகள் தூய நெஞ்ச இருதய ஆண்டவர் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது.

செஸ் போட்டி

இந்திய ஜனாதிபதி டாக்டர் அப்;துல்கலாம் பிறந்த நாளை கொண்டாடும் முகமாக இப்போட்டிகள் அரக்கோணம் செஸ் பயிற்சி பள்ளியின் சார்பில்;; நடைபெற்றது. இப்போட்டிகளில் வேலூர் மற்றும் சுற்றுபுற மாவட்டத்தை சேர்ந்த 10 வயதிற்கு உட்பட்டவர்கள், உட்பட 12 மற்றும் 16வயதிற்கு உட்பட்ட பிரிவுகள் வரையிலான பள்ளி மாணவர்கள், பொது வயதுடையவர்கள் வரையில் நூற்றுகணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா மாலையில் அதே பள்ளியில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு அரக்கோணம் செஸ் பயிற்சி பள்ளி தலைவர் கருணாகரன்; தலைமை தாங்கினார். எஸ்.வேலாயுதம் முன்னிலை வகித்தார். செயலாளர் என்.சரவணன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக அரக்கோணம் நகர காவல்துறை ஆய்வாளர் கே.நாகராஜன், ஐஎன்டியுசி மாவட்ட துணை தலைவர் விஸ்வநாதன், வேலூர் மாவட்ட செஸ் கமிட்டி நிர்வாகிகள் எம்.எஸ்.ரவி, ஜிபிசி.பிரகாஷ் மற்றும் பள்ளி முதல்வர் சிகாமணி ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் சான்றுகள் மற்றும் பரிசு கோப்பைகளை அளித்தனர். இறுதியில் பொருளாளர் எம்.லோகேஷ் அனைவருக்கும் நன்றி கூறினார்.

 

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து