முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.விற்கு தைரியம் இருந்தால் தமிழக கவர்னரை கண்டித்து போராட்டம் நடத்தட்டும் எச்.ராஜா புதுவையில் சவால்

திங்கட்கிழமை, 11 டிசம்பர் 2017      புதுச்சேரி

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா புதுவையில்நிருபர்களிடம் கூறியதாவது:-

ராஜா பேட்டி

பாரதிய ஜனதாவின் தேசிய தலைவர் அமித்ஷா புதுவை வந்தபோது 14-வது நிதிக்குழுவில் புதுவைக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் குறித்தும், திட்டங்களுக்கு மத்திய அரசு அளிக்கும் நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் தெரிவித்தார். பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு புதுவைக்கு நேரடியாக நிதி அளிக்கிறது. புதுவை அரசு வீடு கட்டும் திட்டத்தை தங்களின் திட்டம் போல காட்டிக் கொள்ள முயற்சிக்கிறது. புதுவை மாநிலத்தில் பாதிக்கப்பட்ட மக்களை  கவர்னர் கிரன்பெடி நேரில் சந்தித்து வருகிறார். கவர்னரின்நடவடிக்கையால் புதுவையின்நீர் நிலைகள் மீட்கப்பட்டுள்ளது. நீர் நிலைகளில் படர்ந்திருந்த ஆகாய தாமரைகள் அகற்றப்பட்டுள்ளது. இதனால்மாநில மக்கள்கவர்னர் மீது நலலெண்ணம் கொண்டுள்ளனர். ஆனால் வேண்டுமென்றே காங்கிரசார் கவர்னர் செல்லும்இடங்களில் கலாட்டா செய்து வருகின்றனர். இது 125 ஆண்டுககால காங்கிரஸ் கட்சிக்கு அழகல்ல. இத்தகைய செயல்பாடுகளை நாராயணசாமி கைவிட வேண்டும். இதை பாரதிய ஜனதா எதிர்கொண்டால் காங்கிரசால் சமாளிக்க முடியுமா? பாரதிய ஜனதா தலைவர்கள்மீது கை வைப்பது மோடி மீது கை வைப்பதற்கு சமம். எனவே காங்கிரஷ்இத்தகைய செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். புயல் வீசிய அன்றே மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் அங்கு தங்கி நிவாரண பணிகளை செய்தார். புயல் அடித்த 2-ம்நாள் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இரவு முழுவதும்தங்கி மக்களுக்கு ஆறுதல் கூறினார். இது போன்ற செயல்களை பாரதிய ஜனதா மட்டுமே செய்யும். எனவே மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. இதுவரை 2 ஆயிரத்து 426 மீனவர்கள்மீட்கப்பட்டுள்னர். மீனவர்கள் மட்டுமின்றி அப்பகுதி விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குமரியில்முகாமிட்டுள்ள தேச துரோக கூட்டம் பாரதிய ஜனதாவிற்கு எதிராக மீனவர்களை திசை திருப்பி மீனவர்களை போராட்டத்திற்கு தூண்டுகின்றனர்.பிரதமர் மோடி, தமிழக முதல்வரின் படத்தை போட்டு கண்ணீர் அஞ்சலி என்று ஊர்வலம் செல்கின்றனர். இது அநாகரீகத்தின் உச்சகட்டம். மே 14 இயக்கம், அணு உலை எதிர்ப்பு இயக்கம் ஆகியவை விரட்டி அடிக்கப்பட  வேண்டும்.இவர்களில் யாரேனும்ஒருவர் கடலில்இறங்கி மீனவர்களை பாப்பாற்ற முயற்சி செய்தார்களா? சுனாமியால் குமரி மாவட்டம் பாதிக்கப்பட்டபோதே அத்வானி வந்து பார்வையிட்டார். தற்போது இதுவரை கண்டிராத இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை மத்திய அரசு சரி செய்யும். திருமாவளவன் ஆரம்ப காலத்தில் இருந்தே வன்முறையை தூண்டும் வகையில் பேசி வருகிறார். ஜாதி மோதலை உருவாக்கி மத மாற்றத்ததை செய்ய வேண்டும் என்று அவர் திட்டமிடுகிறார். திருமாவளவனுக்கு எதிராக பேஸ்புக்கில் கருத்து வெளியிட்டவரை கைது செய்தனர். அப்படி இருக்க திருமாவளவனை கைது செய்ய தமிழக போலீசார் தயக்கம் காட்டுவது ஏன்? ஆhகே நகர் தேர்தல் நியாயமாக நடக்கும் என்று நம்புகிறென். இல்லாவிட்டால் கடந்த தேர்தலில் எடுக்கப்பட்ட நடவடிக்கை மீண்டும் எடுக்க நேரிடும். தமிழக கவர்னர் சட்ட நுணுக்கம் தெரிந்தவர். அதனால் தான் தமிழகத்தில் அதிகாரிகளை நேரடியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதை தவறு என்றால் திமுகவுpற்கு தைரியம் இருந்தால்கவர்னரை கண்டித்து போராட்டம் நடத்தட்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில தலைவர் சாமிநாதன், துணை தலைவர்கள்  ஏம்பலம் செல்வம், சோமசுந்தரம், செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து