ஏர்டெல்லின் ரூ.399 திட்டத்தில் மாற்றம்!

புதன்கிழமை, 10 ஜனவரி 2018      வர்த்தகம்
aritel

ஜியோவின் புதிய ஆஃபர் அறிவிப்பைத் தொடர்ந்து, ஏர்டெல் நிறுவனமும் தற்போது தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது. ஜியோவின் அதிரடியான 4 புதிய திட்டங்கள் நேற்று முன்தினம் முதல் ஆரம்பமாகியுள்ளன. தற்போது ஏர்டெல் நிறுவனமும் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ரூ. 399 க்கு ரீசார்ஜ் செய்தால், நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா மற்றும் அளவில்லாத வாய்ஸ் கால்ஸ், நாள் ஒன்றுக்கு 100 இலவச குறுங்செய்திகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், இந்த திட்டம் 70 நாட்களுக்கு 70 நாட்களுக்கு செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து