முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்.கிற்கான நிதி உதவியை அதிகரிக்க பில்கேட்ஸ் முடிவு

திங்கட்கிழமை, 15 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

இஸ்லமாபாத், போலியோ ஒழிப்பு பணியில் தீவிரமாக செயல்பட பாகிஸ்தானுக்கான நிதி உதவியை அதிகரித்து வழங்க பில்கேட்ஸ் முடிவு செய்துள்ளார்.

தொண்டு நிறுவனம்

போலியோ நோய் ஒழிப்புக்காக பாகிஸ்தானுக்கு உலக பெரும் பணக்காரரான பில்கேட்ஸின் தொண்டு நிறுவனம் கோடிகணக்கான ரூபாய் நிதி உதவி அளித்து வருகிறது. பில்கேட்ஸால் நிறுவப்பட்ட பில் மெலிண்டா கேட்ஸ்  அமைப்பு இந்த உதவியை செய்து வருகிறது. பாகிஸ்தானில் இருந்து போலியோ நோயை முற்றிலும் ஒழிப்பதற்காக இந்த நிதி உதவி அளிக்கப்படுகிறது.

அதிகரித்து வழங்க...

போலியோ ஒழிப்பு பணியில், பாகிஸ்தான் அரசு மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக பாராட்டியுள்ள பில்கேட்ஸ், பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட நிதியை அதிகரித்து வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார். பில் மெலிண்டா கேட்ஸ் தொண்டு நிறுவனம் சார்பாக பாகிஸ்தான் சுகாதாரத்துறை மந்திரிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் சரிவர செயல்படவில்லை என கூறி அந்நாட்டுக்கான பாதுகாப்பு நிதி உதவியை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ள நிலையில், பில்கேட்ஸ் அறக்கட்டளை கூடுதல் தொகை ஒதுக்குவதாக அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து