முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜபாளையம் மில்ஸ் 48 வது பொங்கல் விளையாட்டு விழா

திங்கட்கிழமை, 15 ஜனவரி 2018      விருதுநகர்
Image Unavailable

ராஜபாளையம், -ராம்கோ  குரூப் பஞ்சாலைப் பிரிவைச் சார்ந்த ஏழு நிறுவனங்களுக்கான பொங்கல் விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் 14ம் தேதி ராஜபாளையம் மில்ஸ் ஊழியர்கள் மனமகிழ் மன்றத்தின் விளையாட்டு மைதானத்தில் ராம்கோ குரூப் சேர்மன்   வெங்கட்ராம ராஜா தலைமையில் நடைபெற்றது.
விழாவில் இயக்குனர் ஸ்ரீராம் ராஜா மற்றும் ராம்கோ குரூப் டெக்ஸ்டைல்ஸ் டிவிசன் நிறுவனங்களின் இயக்குனர்கள்  மற்றும் தலைவர்  காந்திமதிநாதன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவில் 2017வது வருடத்தில் 7 நிறுவனங்களிலும்  தொழிலாளர்களுக்கு ஊதிய இழப்பு இல்லாமல் அதிக வருடங்கள் பணிபுரிந்ததற்காகவும்,   குழு விளையாட்டு மற்றும் தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற தொழிலாளர்களுக் கும் சிறப்பான பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவுக்கு வருகை தந்திருந்த அனைவரையும் ராம்கோ  குரூப் நுhற்பாலைகளின் முதுநிலை பொது மேலாளர் (மனிதவளம்) நாகரா ஜன்   வரவேற்றுப் பேசினார். தொழிற்சங்கத் தலைவர்கள் கண்ணன், கண்ணன், ஜயன் மற்றும் கிருஷ்ணசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சேர்மன் வெங்கட்ராம ராஜா தனது தலைமையுரையாற்றினார்.  ராம்கோ   குரூப் பஞ்சாலைகளுக்கு இடையேயான உற்பத்தித் திறன் அதிகரிப்பு  சுற்றுப்புறத் தூய்மை, செலவினங்களை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில், எக்ஸெல் அவார்டு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதில் முதல் பரிசு ராஜபாளையம் டெக்ஸ்டைல் லிமிடெட் குரூப்பும், இரண்டாவது பரிசு ரா ஜபாளையம் மில்ஸ் லிமிடெட்க் குரூப்பும், மூன்றாவது பரிசு சங்கர் மில்ஸ் குரூப்பிற்கும் வழங்கப்பட்டன. மேலும் ராம்கோ   குரூப் டெக்ஸ்டைல்ஸ் டிவிசனில் உள்ள ஏழு மில்களுக்கு டைரக்டர் டாக்டர் பாலகிருஷ்ணன் கேடயமும் சான்றிதழ்களும் வழங்கினார். செண்பக குமரன் நன்றி உரையுடன் விழா இனிதே நிறைவடைந்தது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ரா ஜபாளையம் மில்ஸின் வைஸ் பிரஸிடெண்ட் (டெக்னிக்கல்) மற்றும் முதுநிலை பொது மேலளார் (மனிதவளம்) மற்றும் அனைத்து அலுவலர்களும் சிறப்பாகச் செய்திருந்தனர். விழா நிறைவுற்றதும் சேர்மன் பி.ஆர். வெங்கட்ராம ராஜா தொழிலாளர்களுடன் இரவு விருந்தில் கலந்து கொண்டு சிறப்பித்தார்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து