முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தை அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் ஏராளமானோர் தர்ப்பனம் கொடுத்து வழிபாடு

செவ்வாய்க்கிழமை, 16 ஜனவரி 2018      தூத்துக்குடி
Image Unavailable

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் தை அமாவாசையை முன்னிட்டு நேற்று ஏராளமானோர் தர்ப்பனம் கொடுத்து தங்கள் முன்னோர்களை வழிபட்டனர்.

தை அமாவாசை

இந்துக்கள் தை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் ஆற்றாங்கரை அல்லது கடற்கரையில் அமர்ந்து தர்ப்பனம் கொடுத்து தங்கள் முன்னோர்களை வழிப்பட்டு விரதம் கடைபிடித்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது. தை அமாவாசை தினமான நேற்று ஏராளமானோர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலில் புனித நீராடி கடற்கரையில் அமர்ந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பனம் கொடுத்து வழிபட்டனர். பின்னர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து சுவாமி அஸ்திரதேவர் சண்முக விலாச மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து