முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்மாவத் பட சர்ச்சை: தடையை நீக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தயாரிப்பாளர் வழக்கு

புதன்கிழமை, 17 ஜனவரி 2018      சினிமா
Image Unavailable

புதுடெல்லி, பத்மாவத்' திரைப்படத்திற்கு பல்வேறு மாநில அரசுகளும் தடை விதித்துள்ள நிலையில் அதனை நீக்கக்கோரி, அப்படத்தின் தயாரிப்பாளர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பத்மாவத். இதில் ராஜஸ்தானின் சித்தூரை ஆண்ட ராஜபுத்திர வம்ச ராணி பத்மினி வேடத்தில் நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக கூறி கர்னி சேனா உள்ளிட்ட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பல்வேறு சிக்கல்களைக் கடந்து இப்படம் வரும் 25-ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்தப் படத்திற்கு திரைப்பட தணிக்கை வாரியம் அனுமதி அளித்துள்ள நிலையில், சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், அரியானா மாநில அரசுகள் படத்தைத் திரையிட தடை விதித்துள்ளன. இதை எதிர்த்து படத்தின் தயாரிப்பாளர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திரைப்படம் 25ம் தேதி வெளியாக உள்ளதால், இதனை அவசர வழக்காக விசாரித்து, மாநில அரசுகள் விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, சந்திரசூட், கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளது. விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து