முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெல்ல உயரும் பெட்ரோல், டீசல் விலை

சனிக்கிழமை, 20 ஜனவரி 2018      வர்த்தகம்
Image Unavailable

இரு மாதங்களில் கணிசமான உயர்வு கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி டீசல் விலை லிட்டருக்கு 61 ரூபாய் 51 காசுகளாக இருந்தது. டிசம்பர் 22-ம் தேதி இந்த விலை 62 ரூபாய் 5 காசுகளாகவும், ஜனவரி 3-ம் தேதி 63 ரூபாய் 3 காசுகளாகவும் இருந்தது. ஜனவரி 10-ம் தேதி 64 ரூபாய் 9 காசுகளாகவும், 19-ம் தேதி 65 ரூபாய் 83 காசுகளாகவும் இருக்கிறது. அதாவது கடந்த 50 நாட்களில் டீசல் விலையில் லிட்டருக்கு 4 ரூபாய் 32 காசுகள் விலை உயர்ந்துள்ளது.

இதேபோல, பெட்ரோல் விலையை பொறுத்தவரை கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி லிட்டருக்கு 71 ரூபாய் 74 காசுகளாக இருந்தது. டிசம்பர் 22-ம் தேதி 72 ரூபாய் 3 காசுகளாகவும், ஜனவரி 8-ம் தேதி 73 ரூபாய் ஒரு காசாகவும், 17-ம் தேதி 74 ரூபாய் 02 காசுகளாகவும் இருந்தது. ஜனவரி 19-ம் தேதி நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 74 ரூபாய் 35 காசுகளாக உள்ளது. கடந்த 50 நாட்களில் பெட்ரோல் விலை 2 ரூபாய் 61 காசுகள் என்ற அளவில் உயர்வு கண்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து