முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லை தாண்டி வந்து மீன் பிடிக்கும் படகுகளுக்கு ரூ.17 கோடி அபராதம் இலங்கை பார்லி.யில் மசோதா நிறைவேற்றம்

வியாழக்கிழமை, 25 ஜனவரி 2018      இலங்கை
Image Unavailable

கொழும்பு: எல்லை தாண்டி வந்து மீன் பிடிக்கும் வெளிநாட்டு படகுகளுக்கு ரூ.17½ கோடிவரை அபராதம் விதிக்கும் மசோதா, இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேறியது.

தனிக்குழு...
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிப்பதாக இலங்கை கடற்படை குற்றம் சாட்டி வருகிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளும் பலன் அளிக்கவில்லை. அதன் விளைவாக, இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிக்கும் வெளிநாட்டு படகுகளுக்கும் அபராதம் விதிக்க இலங்கை மீன்வளத்துறை சார்பில் யோசனை வழங்கப்பட்டு, சட்ட திருத்தத்தை தயாரிப்பதற்கான தனிக்குழு அமைக்கப்பட்டது.

மசோதா...
இதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட திருத்த மசோதாவை இலங்கை பாராளுமன்றத்தில் மீன்வளத்துறை மந்திரி மகிந்த அமரவீரா தாக்கல் செய்தார். இந்த சட்ட திருத்தத்தின் மூலம், 15 மீட்டர் நீளமுடைய படகுக்கு இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ.50 லட்சமும், 15 முதல் 24 மீட்டர் நீள படகுக்கு ரூ.2 கோடியும், 24 மீட்டர் முதல் 45 மீட்டர் நீளமுள்ள படகுக்கு ரூ.10 கோடியும், 45 மீட்டர் முதல் 75 மீட்டர் நீளமுடைய படகுக்கு ரூ.15 கோடியும், 75 மீட்டருக்கு அதிகமுள்ள படகுக்கு ரூ.17½ கோடியும் அபராதம் விதிக்கப்படும்.

மேலும், இலங்கை எல்லைக்குள் அத்துமீறும் வெளிநாட்டு படகுகளின் உரிமையாளர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, வழக்கு ஒரு மாதத்துக்குள் முடித்து வைக்கப்படும் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து