முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரட்டாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்

சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2018      தர்மபுரி
Image Unavailable

 

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், வரட்டாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார். இந்நிகழ்விற்கு கலெக்டர்.கே.விவேகானந்தன்,தலைமை வகித்தார்.

 

பாசனத்திற்கு தண்ணீர்

 

முதலமைச்சர் தருமபுரி மாவட்டம், வரட்டாறு நீர்த்தேக்கத்திலிருந்து பழைய மற்றும் புதிய பாசனப் பரப்புகளுக்கு பாசனத்திற்காக 10.02.2018 இன்று முதல் 30 நாட்களுக்கு பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு ஒரு முறையும், புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு சுழற்சி முறையில் இரண்டு நனைப்புகளுக்கு என மொத்தம் 77.760 மி.க.அடி தண்ணீரை திறந்துவிட ஆணையிட்டுள்ளார்கள்.

அதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், வரட்டாறு நீர்த்தேக்கத்திலிருந்து 10.02.2018 முதல் 25 ஏரிகளின் மூலம் பாசனம் பெறும் பழைய மற்றும் புதிய ஆயகட்டு பரப்பு 2255 ஏக்கர் நிலங்களுக்கு 20 நாட்களுக்கும், மற்றும் நேரடி பாசனம் மூலம் புதிய ஆயக்கட்டு பரப்பு 2853 ஏக்கர் நிலங்களுக்கு தொடர்ந்து 10 நாட்களுக்கு தண்ணீர் விடப்படும் ஆகமொத்தம் 5108 ஏக்கர் பயனடையும் வகையில் 30 நாட்களுக்கு 77.760 மி.க. அடிக்கு மிகாமல், நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தினை பொறுத்து தண்ணீர் திறந்துவிட அரசு ஆணயிடுகிறது. இதன்மூலம், வள்ளிமதுரை, தாதரவலசை, சாமநத்தம், கீரைப்பட்டி, குடுமியாம்பட்டி, அச்சல்வாடி, சாமநத்தம், புதூர், எல்லப்புடையாம்பட்டி, நாச்சினாம்பட்டி, கௌhப்பாறை, ஈட்டியாம்பட்டி, மாம்பாடி, செல்லம்பட்டி, மாவேரிப்பட்டி, கம்மாளம்பட்டி, ஆகிய 15 கிராமங்கள் பயன்பெறும்.

அதிக விளைச்சல்

எனவே விவசாய பொதுமக்கள் பொதுப்பணித்துறையினருடன் ஒத்துழைத்து தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு அதிக விளைச்சல் பெறுமாறு விவசாய பெருமக்களை மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் அரூர் கோட்டாட்சியர் பத்மாவதி, பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார், மத்தியகூட்டுறவு வங்கி இயக்குனர் பொன்னுவேல், அரசு வழக்கறிஞர் பசுபதி, கூட்டுறவு சங்கத்தலைவர் நல்லதம்பி, மாவட்ட கூட்டுறவு அச்சக இயக்குநர் சம்பத்குமார், கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தலைவர் சண்முகசுந்தரம், அரூர் வேளாண்மை விற்பனை சங்க தலைவர் ஆசைராஜா, அரூர் வட்டாட்சியர் பரமேஸ்வரி, உதவி பொறியாளர் மாலதி, மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயப்பெருமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து