முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடியின் அருணாச்சல் பயணத்தை விமர்சனம் செய்த சீன அரசு

வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

பெய்ஜிங்: பிரதமர் மோடி அருணாச்சலப் பிரதேசத்துக்கு பயணம் செய்ததை சீனா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

மோடியின் இப்பயணம் இந்தியா - சீன இடையே நல்லுறவை ஏற்படுத்தும் முயற்சிக்கு உதவப் போவதில்லை என்றும் சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கூறுகையில் , “சர்ச்சைக்குரிய பகுதியான அருணாச்சலப் பிரதேசத்துக்கு பிரதமர் மோடி வியாழக்கிழமை பயணம் செய்ததை கடுமையாக எதிர்க்கிறோம். இந்தப் பயணம் சீனா - இந்தியா இடையே நல்லுறவை ஏற்படுத்தும் முயற்சிக்கு உதவப் போவதில்லை.

சீனா - இந்தியா எல்லைப் பிரச்சினை பற்றிய சீனாவின் நிலைப்பாடு தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளது. சர்ச்சைக்குரிய பகுதியை அருணாச்சாலப் பிரதேசம் என்று அழைக்கப்படுவதை நாங்கள் ஒருபோதும் அங்கீகரிக்கப்போவதில்லை” என்று கூறினார்.

அருணாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைப் பகுதிகளைத் தங்களது நாட்டின் பகுதிகளாக சீனா கூறி வருகிறது.

இதனை இந்தியா தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வருகிறது. இதுவரை இந்தப் பிரச்சினையை தீர்க்க 18 முறை இரு நாடுகளும் சேர்ந்து கூட்டு ஆலோசணை நடத்தியபோதிலும் இதற்கு தீர்வு இதுவரை எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து