முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடியோ: சேலம் மாவட்ட ஆட்சியர் திருமதி ரோகிணி தலைமையில் முத்தரப்பு கூட்டம்

வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

சேலம், மரவள்ளி கிழங்கிற்கு உரிய விலை நிர்ணயம் செய்திட வேண்டுமென வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் தலைமையில் முத்தரப்பு கூட்டத்தை கூட்ட வேண்டுமென விவசாயிகள் தமிழக அரசிற்கு பல முறை கோரிக்கை விடுத்து வந்தனர். இதனடிப்படையில் சேலம் மாவட்ட மரவள்ளி கிழங்கு விவசாயிகள், சேகோ உற்பத்தியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கொண்ட முத்தரப்பு கூட்டம், மாவட்ட ஆட்சியர் திருமதி ரோகிணி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மரவள்ளி கிழங்கு விவசாயிகள் தங்களின் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். குறிப்பாக விவசாயிகள் உற்பத்தி செய்யும் கிழங்கிற்கு உரிய விலை கிடைப்பதில்லை என்றும்,இடைத்தரகர்களின் ஆதிக்கத்தால் சிண்டிகேட் அமைத்து, மரவள்ளிக் கிழங்கை வாங்குவதாகவும் இதனால் விவாயிகளாகிய நாங்கள் பெரும் இழப்பை சந்தித்து வருவதாகவும், ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் லாபத்தை பெருக்கும் வகையில் மரவள்ளி கிழங்கிற்கு பதிலாக,மக்காச்சோள மாவை சேர்ப்பதாகவும், இதனால் மரவள்ளி கிழங்கிற்கு உரிய விலை கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே மாவட்ட ஆட்சியர் இந்த பிரச்சனையில் தலையிட்டு,மரவள்ளி கிழங்கிற்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த சேகோ ஆலை உரிமையாளர்கள், கிழங்கு உற்பத்திக்கு ஏற்ற வகையில் ஜவ்வரிசி தயார் செய்யப்படுகின்றது என்றும்,ஆலை உரிமையாளர்கள் பல்வேறு பிரசச்னைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும், இதனால்,கிழங்கிற்கு அதிக விலை கொடுக்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர். சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில்,மரவள்ளி கிழங்கிற்கு, உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும், ஜவ்வரிசியில் கலப்படம் செய்யும் நிறுவனங்கள் மீது, பாரபட்சம் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,ஆலைகளை மேற்பார்வை செய்ய,அதிகாரிகளை கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கபப்டும் என்றும் தெரிவித்தார். பேட்டி: சுந்தரம் (மாநில பொதுச்செயலாளர், தமிழக விவசாயிகள் சங்கம்)

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து