முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல நடிகர்களுக்கு எல்லாம் தெரியும் என மக்கள் நினைப்பது தவறு: சத்யராஜ்

சனிக்கிழமை, 17 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: பிரபல நடிகர்களுக்கு எல்லாம் தெரியும்  என மக்கள் நினைப்பது தவறு என்று நடிகர் சத்யராஜ்  தெரிவித்துள்ளார்.

திராவிட இயக்க தமிழர் பேரவை மாநாட்டில் நடிகர் சத்யராஜ் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
கடவுள் பெயரால் ஏற்றத்தாழ்வு கூடாது. புரிதலோடு கூடிய நாத்திகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்றும் சத்யராஜ் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், பெரியார் கருத்தை அப்படியே ஏற்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், பிடிக்கவில்லை என்றால் பெரியார் கருத்தை ஏற்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் பிரபல நடிகர்களுக்கு எல்லாம் தெரியும் என மக்கள் நம்பக்கூடாது என்றும் அப்படி நம்பினால் அது தவறு என்றும் சத்யராஜ் தெரிவித்தார். நான் அரசியலில் தோற்றால் அது பெரிய தோல்வி அல்ல என்றார் அவர், வெற்றி பெற்றால் உங்கள் நிலைமை என்ன என்பது பற்றி யோசிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். பிரபல நடிகர்களான ரஜினி மற்றும் கமல் அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் நடிகர் சத்யராஜின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து