முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை வெல்ல காரணமான சுழற்பந்து வீரர்களுக்கு கேப்டன் கோலி பாராட்டு

சனிக்கிழமை, 17 பெப்ரவரி 2018      விளையாட்டு
Image Unavailable

செஞ்சூரியன் : தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்ற காரணமாக இருந்த சுழற்பந்து வீரர்கள் சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார்.
விராட் கோலியின் அதிரடியான சதத்தால் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா 5-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. தென்ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி முதல் முறையாக தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. இதற்கு முன்பு அந்நாட்டில் 4 முறை ஒருநாள் தொடரில் இந்தியா ஆடி இருக்கிறது.

4-வது சதம்...

தொடரை வெல்ல விராட்கோலியின் ஆட்டம் தான் காரணம். அவர் ஒருநாள் தொடரில் 3 சதம் அடித்தார். மேலும் இந்த சுற்றுப்பயணத்தில் 4-வது சதத்தை பதிவு செய்தார். கோலி சர்வதேச போட்டியில் 17 ஆயிரம் ரன்னை வேகமாக தொட்டு சாதனை படைத்தார். இதே போல ஒரு நாள் போட்டியில் அதிவேகத்தில் 9,500 ரன்னை எடுத்து டிவில்லியர்சை முந்தினார்.
இந்தியாவின் வெற்றி குறித்து கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

சாஹல், குல்தீப்...

இந்த ஆடுகளத்தில் மின்னொளியில் பேட்டிங் செய்வது எளிதாக இருந்தது. இதன் காரணமாகவே ‘டாஸ்’ வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தேன். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்ற சுழற்பந்து வீரர்கள் சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் காரணமாக இருந்தனர். அவர்கள் இந்த தொடரில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தினர். டெஸ்ட் தொடரை இழந்த பிறகு ஒருநாள் தொடரை கைப்பற்றியது சிறப்பானது.

சாதகமாக இருந்தது...

நான் விளையாட வந்து 9 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. கேப்டனாக இருந்து சிறப்பாக ஆடுவது முக்கியமானது. அபாரமாக ஆடி தொடரை கைப்பற்ற எனது பங்களிப்பு இருந்ததை அற்புதமாக உணர்கிறேன். இந்தப் போட்டியில்  ஷார்ட் பிட்ச் பந்துகளை சரியாக எதிர்கொண்டேன். அவர்களும் தொடர்ந்து ஷார்ட் பிட்ச் பந்துகளையே வீசினார்கள். ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது.கடந்த போட்டியில் சரியான மனநிலையில் இல்லை. இந்தப் போட்டியில் நன்றாக விளையாடினேன். இந்த வெற்றிக்காக, எனக்கு நெருக்கமாக இருப்பவர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன்.

120 சதவீதம் வரை...

கடவுளின் ஆசிர்வாதத்தால் ஆரோக்கியமாக இருக்கிறேன். கேப்டன் என்ற முறையில் எனது பங்களிப்பை 120 சதவீதம் வரை அளிக்க இயலும். அடுத்த வரும் 20 ஓவரிலும் எங்கள் திறமையை வெளிப்படுத்துவோம். இதிலும் சுழற்பந்து வீரர்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

பட்டமெல்லாம் வேண்டாம்

தென்னாப்பிரிக்க அணியுடனான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இதையடுத்து ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. பின் பேசிய கோலி, என்னை ’பேட்டிங் சூப்பர்மேன்’ என்று சொல்வதை பற்றிக் கேட்கிறார்கள். எனக்கு எந்தப் பட்டத்தின் மீதும் விருப்பம் வில்லை. தலைப்பு செய்தியாகவும் நான் விரும்பவில்லை. என்னை பற்றி என்ன எழுதினாலும் கவலைப்படுவதில்லை. ஏனென்றால் எழுதுவது அவர்கள் சுதந்திரம். ஆனால், நான் என் வேலையை செய்கிறேன். அதற்காக கடுமையாக பயிற்சி பெறுகிறேன். அணியின் வெற்றிக்கு என்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என நினைக்கிறேன். அதை நோக்கியே என் பயணம் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து