முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்பு

புதன்கிழமை, 28 பெப்ரவரி 2018      வர்த்தகம்
Image Unavailable

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் சீனாவை விட அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவந்துள்ளது. நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.9 சதவீதமாக இருக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பொருளாதாரம் மந்த நிலை நீங்கி வளர்ச்சியை நோக்கி முன்னேறி வருவதாகவும் 3-வது காலாண்டில் தொழில் மற்றும் சேவை துறைகளின் வளர்ச்சி அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியடைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன்படி சீனாவின் ஆண்டு பொருளாதார வளர்ச்சியான 6.8 சதவீதத்தை விட இந்திய பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து