முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சரக்கு வாகனத்தில் பயணம் செய்யாதீர்கள் மனுநீதி முகாமில் கோட்டாட்சியர் அறிவுறுத்தல்

புதன்கிழமை, 7 மார்ச் 2018      வேலூர்

அரககோணம் அருகே நடைபெற்ற மனுநீதி முகாமில் கலந்து கொண்டு வருவாய் கோட்டாச்சியர் வேணிசேகரன் பேசிய போது எந்த சூழ்நிலையிலும் அவசர தேவைகளுககாக யாரும் குட்டி யாணை பயன்படுத்த வேண்டாம் என கேட்டு கொள்வதாக பொது மககள் மத்தியில் கேட்டுகொண்டார், வேலூர் மாவட்டம், சோளிங்கர் சட்டமன்ற தோகுதி, அரககோணம் வட்டம், கூடலு£ர் கிராமத்தில் பாராஞ்சி, ஐப்பேடு, கூடலூர் என முன்று கிராமங்களுககான மனுநீதிநாள் முகாம் நேற்று திருமண மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது,

அறிவுறுத்தல்

இந்த முகாமிற்கு வந்தவர்களை வட்டாச்சியர் பாபு வரவேற்று பேசினார், கோட்டாச்சியர் வேணிசேகரன் தலைமை தாங்கி பேசினார், அவர்பேசிய போது கிராமத்தினர் தங்கள் தேவைகளுககாக வட்டாச்சியர் அலுவலகத்திற்கு பல்வேறு சிரமங்களுககு மத்தியல் வரகூடிய சூழநிலை அறிந்து அரசு நிர்வாகமே கிராமத்திற்கு சென்று உதவவேண்டும் என்ற நல்ல முடிவினால் மனுநீதிநாள் முகாம் அறிமுகபடுத்தப்பட்டது, அதன்படி இத்திட்டம் 1967ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அன்று முதல் இன்று வரை பொதுமககள் இத்திட்டத்தின் பயனை முழமையாக பெற்று வருகிறார்கள்.

இதுபோல் நீங்கள் எல்லோரும் நல்ல முறையில் பயணம் மேற்கொள்ள வேண்டும் ஏனேனில் அவசர தேவைகளுககாக குட்டியாணை எனும் சிறிய வாகனத்தை அதிகமானவர்களுடன் பயணம் செய்கிறீர்கள் பாதுகாப்பற்ற இந்த பயணத்தில் பலர் உயிர்விடுகிறீர்கள் எனவே, இதுபோன்ற வாகனங்களில் அதிகம்பேர் பயணம் செய்யாதீர்கள் என அனைவரையும் கேட்டு கொள்கிறேன். என்று பேசினார், முன்னதாக வட்டவழங்கல் அலுவலர் குமார், வேளாண்மை அலுவலர், வட்டார வளர்ச்சி உதவிஆணையாளர் பொன்வேலு, உள்ளிட்டவர்களும் பேசினர்.

 

 

கலந்து கொண்டோர்

 நிகழ்ச்சிகளை கிராம அதிகாரி தணிகாசலம் தொகுத்து வழங்கினார், வருவாய் ஆய்வாலர் இந்துமதி, கிராம அதிகாரிகள் முருகன், வரதராஜ், வெங்கடேசன், கிருஷ்ணன், மற்றும் சிப்பந்திகள் பொதுமககள் பலர் கலந்து கோண்டனர் முன்று கிராமங்களை சேர்ந்தவர்களிடமிருந்து மொத்தம் 40மனுககள் பெறப்பட்டன இதில் 18 வாரிசு சான்றுகளும், முன்று குறுசிறு விவசாயிகள் சான்றுகளும், ஒருவருககு ஓஏபி ஆணையும் வழங்கப்பட்டது. இறுதியாக கிராம அதிகாரி முர்த்தி நன்றி கூறினார்,

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து