முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.பி.ஐ. அதிகாரிகள் ஏன் திருப்பதி கோயிலில் உண்டியல் பணம் எண்ண செல்லக் கூடாது? ப. சிதம்பரம் கிண்டல்

ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ஏன் திருப்பதி கோயிலில் உண்டியல் பணம் எண்ண செல்லக் கூடாது என்று ப. சிதம்பரம் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

சென்ற வருடம் நவம்பர் மாதம் 8-ம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இப்போது வரை கோடிக்கணக்கில் பழைய ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்ப வரவில்லை. 2 சதவிகித நோட்டுகள் இன்னும் ரிசர்வ் வங்கியிடம் வரவில்லை என்று கூறப்படுகிறது.

தற்போது திருப்பதி தேவஸ்தானத்திடம் 25-30 கோடி வரை பழைய ரூபாய் நோட்டுக்கள் இருக்கிறது. இதில் 1000 ரூபாய் நோட்டுகள் அதிகம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தற்போது இதை முழுமையாக கணக்கு எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. எவ்வளவு பணம் முழுமையாக இருக்கிறது என்று சில நாட்களுக்குள் தெரிய வரும். பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தரும்படி தற்போது திருப்பதி தேவஸ்தானம் ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை வைத்துள்ளது. இதற்கு பதிலளித்த ஆர்.பி.ஐ. இன்னும் பழையாய் ரூபாய் நோட்டுக்களை எண்ணிக் கொண்டு இருக்கிறோம் என்று கூறியுள்ளது. விரைவில் திருப்பதி தேவஸ்தான பணம் வாங்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ஏன் திருப்பதி கோயிலில் உண்டியல் பணம் எண்ண செல்லக்கூடாது என்று ப. சிதம்பரம் கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும் ஆர்.பி.ஐ. அதிகாரிகளை விட திருப்பதி கோயில் ஊழியர்கள் வேகமாக பணம் எண்ணுவதாக கூறியுள்ளார். மேலும் 14 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டது மன்மோகன் சிங்கின் மிகப்பெரிய சாதனை. அதே மக்களை மக்களை வறுமையில் தள்ளியதுதான் பா.ஜ.க அரசு செய்த சாதனை. இதை பணமதிப்பிழப்பு மூலம் எளிதாக நடத்தி இருக்கிறது பா.ஜ.க. அரசு என்று சிதம்பரம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து