முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடியோ : கம்பர் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் மலர்தூவி மரியாதை

சனிக்கிழமை, 24 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

கம்பர் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் மலர்தூவி மரியாதை கம்பர் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார்,எம்.பி ஜெயவர்தனா மற்றும் அமைச்சர் பெஞ்சமின் சென்னை அண்ணா சமாதியில் உள்ள கம்பர் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தனர் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி: கம்பரை போன்ற புலவர் தமிழுக்கு கிடைப்பது அரிது. உலகத்தார் அனைவரும் போற்றும் வகையில் தமிழுக்கு இன்றைக்கும் பல இலக்கியங்கள் கம்பரால் மக்களுக்கு வழங்கப்படுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக 15 நாட்களாக தொடர்ந்து மிகுந்த அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று முழுமையான அளவுக்கு அழுத்தம் இதுவரை அளித்ததில்லை. எனவே அனைத்து கட்சி கூடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டத்து. இந்திய வரலாற்றிலேயே பெரிய அளவில் நாடாளுமன்றத்திய முடங்கியது அதிமுக தான். எனவே மத்திய அரசு தமிழக மக்களை நலன் கருதி காவிரி மேலாண்மை அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. யாரும் செய்த அழுத்தம் கொடுத்துள்ள இந்த நிலையில், ஸ்டாலின் அவர்கள் சோனியாகாந்தி மற்றும் ராகுல் ஆகியோருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அப்படி காங்கிரஸ் ஒத்துழைக்கவில்லை என்றால் கூட்டணி விட்டு வெளியே செல்வோம் என்று ஸ்டாலின் அழுத்தம் தர வேண்டும் தெலுங்கானா பிரச்சனை வேறு காவிரி பிரச்சனை வேறு. எனவே இரண்டிற்கும் சம்பந்தம் இல்லை. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் மாநில நிதி தன்னாட்சிக்கு குரல் கொடுத்தவர்கள், அவர்கள் வழியில் தற்போதும் அதிமுக நடைபெற்று வருகிறது. 'தான் திருடன் பிறரை நம்பான்'. என்பது போல திருடன் திருடிவிட்டு திருடன் திருடன் என்று ஓடுவான் அதுபோல் உள்ளது தினகரன் கருத்து. நாட்டுமக்கள் குற்றம் தெரிந்தவர் யார் என்பதை உணர்ந்துள்ளனர். கை புண்ணிற்கு கண்ணாடி தேவையில்லை. அரசு சார்பில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே உண்மை தெரியவரும். தமிழ்நாடு வீரம் நிறைந்த மண், வீரம் யாரையும் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என தமிழிசை கருத்துக்கு, அமைச்சர் ஜெயக்குமார் பதில்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து