முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல் போட்டியில் வார்னர் நீக்கம்: ஷிகர் தவானுக்கு வாய்ப்பு?

புதன்கிழமை, 28 மார்ச் 2018      விளையாட்டு
Image Unavailable

மும்பை: 11-வது ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா வரும் ஏப்ரல் 7-ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. மொத்தம் 60 போட்டிகள் 51நாட்கள் 8 அணிகள். சர்வதேச, உள்ளூர் வீரர்கள் பங்குபெறும் இந்தப்போட்டிகள் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வண்ணம் அமையும். இந்தப்போட்டிகள் இளம் வீரர்கள் சர்வதேச அளவில் ஜொலிப்பதற்கான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. சென்னை சூப்பர்கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் xi பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்ஜர்ஸ் பெங்களூர், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் களமிறங்குகின்றன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இரண்டாண்டு தடைக்கு பின்னர் மீண்டும் களமிறங்குகின்றன.

அணிகள்                                                                    கேப்டன்
சென்னை சூப்பர் கிங்ஸ்                                          டோனி
டெல்லி டேர்டெவில்ஸ்                                              கெளதம் காம்பீர்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்                                    தினேஷ் கார்த்திக்
மும்பை இந்தியன்ஸ்                                                 ரோகித் ஷர்மா
ராயல் சேலஞ்ஜர்ஸ் பெங்களூரு                               விராட் கோலி
கிங்ஸ் xi பஞ்சாப்                                                        அஸ்வின்
ராஜஸ்தான் ராயல்ஸ்                                                 ரஹானே

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்              (டேவிட் வார்னர் நீக்கம் இந்திய வீரர் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கலாம் என தெரிகிறது)

முதன்முறையாக...
தவானை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக அறிவித்தால் ஐ.பி.எல் வரலாற்றில் முதன்முறையாக இந்திய வீரர்கள் அனைத்து அணிகளுக்கும் தலைமை பொறுப்பு வகிப்பர். இவ்வாறு நடத்தால் இந்த ஐ.பி.எல் தொடர் மேலும் விறுவிறுப்பை எட்டும். முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டேவிட் வார்னர்  கேப்டன்களாக நியமிக்கப்பட்டனர்.

ரஹானே கேப்டன்...
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்மித், துணைக் கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இவ்விவகாரம் குறித்து விசாரித்த ஐசிசி, ஸ்மித்துக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடையும், போட்டி ஊதியம் முழுவதையும் அபராதமாக விதித்து உத்தரவிட்டது.  ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் 2ஆண்டு தடைக்கு பிறகு களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாக ஸ்மித் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் ஸ்மித் விலகினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில்  ஸ்மித்துக்கு பதிலாக ரஹானே கேப்டனாகச் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து டேவிட் வார்னர் நீக்கப்பட்டார். இதில் தற்போது இந்திய கிரிக்கெட் வீரர் தவான் கேப்டனாக நியமிக்கப்படலாம் என தகவல் வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து