முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுமித், வார்னர் மீதான தடை சரியானதே - சச்சின் டெண்டுல்கர் கருத்து

வியாழக்கிழமை, 29 மார்ச் 2018      விளையாட்டு
Image Unavailable

மும்பை : பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சுமித், வார்னர் மீதான ஒரு ஆண்டு தடை சரியான முடிவே என்று கிரிக்கெட்டின் சகாப்தமான சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

மூலக் காரணம்...

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கியது. 3-வது டெஸ்ட் போட்டியின் போது கேப்டன் ஸ்டீபன் சுமித்தின் ஒப்புதலுடன் புதுமுக வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தினர். துணை கேப்டனான டேவிட் வார்னர் இதற்கு மூலக் காரணமாக இருந்தார்.

விசாரணை...

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு ஏற்பட்ட இந்த அவமானத்தால் அந்நாட்டு பிரதமரே அதிர்ச்சி அடைந்தார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ஜேம்ஸ் சதர்லேன்ட், நேர்மை குழு தலைவர் இயன் ராய் ஆகியோர் தென் ஆப்பிரிக்கா சென்று விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் சுமித், வார்னருக்கு ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டது. பான்ட் கிராப்டுக்கு 9 மாத தடை விதிக்கப்பட்டது.

பதவியை ஏற்க...

சுமித் 2 ஆண்டுக்கு ஆஸ்திரேலிய அணி கேப்டன் பொறுப்பை ஏற்க முடியாது. வார்னர் எந்த காலத்திலும் இனி ஆஸ்திரேலிய கேப்டன் பதவியை ஏற்க முடியாது. இந்த தடையால் இரு வரும் சேர்ந்து ரூ.25 கோடியை இழந்து உள்ளனர். 6 பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் சுமித்தும், வார்னரும் இந்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் விளையாட முடியாது.

பணத்தை இழந்த...

சுமித் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூ.12½ கோடிக்கும், வார்னர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் ரூ.12½ கோடிக்கு தக்க வைக்கப்பட்டு இருந்தனர். தற்போது விளையாட முடியாத சூழ் நிலையை ஏற்படுத்தி விட்டதால் இருவரும் கோடிக் கணக்கான பணத்தை இழந்துள்ளனர். மேலும் பல்வேறு விளம்பர ஒப்பந்தங்களை அவர்கள் இழப்பார்கள்.

தடை சரியானதே...

இதற்கிடையே சுமித், வார்னர் மீதான ஒரு ஆண்டு தடை சரியான முடிவே என்று கிரிக்கெட்டின் சகாப்தமான சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். இந்திய அணி முன்னாள் கேப்டனான அவர் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

கிரிக்கெட் ஒரு ஜென்டில் மேன் விளையாட்டு என்பதை அனைவரும் அறிவார்கள். நேர்மையுடன் விளையாட வேண்டும் என்றுநான் நம்புகிற விளையாட்டு ஆகும். என்ன நடந்ததோ அது துரதிருஷ்டவசமானது. ஆனால் கிரிக்கெட் விளையாட்டில் நேர்மையை நிலை நாட்ட சரியான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வெற்றி முக்கியம். ஆனால் அதற்கான வழி உங்களுக்கு அதை விட முக்கியம் இவ்வாறு டெண்டுல்கர் தனது ட்விட்டரில் தெரிவித்து உள்ளார்.

அதிக தண்டனை...

இதனால் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் வார்னே கூறும்போது:- இது அதிக தண்டனையாகும். அந்த அளவுக்கு இருவரும் குற்ற செயல்களில் ஈடுபட வில்லை. ஒரு ஆண்டு தடை இதற்கு பதிலாக இல்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து