முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாமியார் ஆசாராம் மீதான வழக்கில் 25-ம் தேதி தீர்ப்பு

ஞாயிற்றுக்கிழமை, 8 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

Source: provided

ஜோத்பூர் :  சாமியார் ஆசாராம் பாபு மீதான பாலியல் பலாத்கார வழக்கில் வரும் 25-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

குஜராத் மாநிலத்தை பூர்விகமாக கொண்ட சாமியார் ஆசாராம் பாபுவுக்கு நாடு முழுவதும் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆசிரமங்கள் உள்ளன. கடந்த 2012-ம் ஆண்டில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் 16 வயது சிறுமியை சாமியார் ஆசாராம் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் 2013 ஆகஸ்ட் 3-ல் அவர் கைது செய்யப்பட்டு ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு ஜோத்பூர் சிறப்பு எஸ்.சி, எஸ்.டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிபதி மது சூதன் சர்மா வழக்கை விசாரித்து வருகிறார். வழக்கின் இறுதி விசாரணை  நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து வரும் 25-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.

இதில் ஆசாராம் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். குஜராத் மாநிலம், சூரத்தை சேர்ந்த சகோதரிகள் சாமியார் ஆசாராம் மீதும் அவரின் மகன் நாராயண் சாய் மீதும் பாலியல் பலாத்கார புகார் கூறியுள்ளனர். இந்த வழக்கு குஜராத் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து