முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் கோரிக்கையை ஏற்பு: நிரவ் மோடியை ஹாங்காங் கைது செய்ய சீனா சம்மதம்

திங்கட்கிழமை, 9 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : இந்தியாவின் கோரிக்கையை ஏற்று நிரவ் மோடியை ஹாங்காங் கைது செய்ய சீனா பச்சைக்கொடி காட்டி உள்ளது.

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000  கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்தது சமீபத்தில் தெரியவந்தது. இருவரும் இந்தியாவைவிட்டு வெளியேறிவிட்டனர்.

இன்டர்போல் உதவி

வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை முகமைகள் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. மோசடி தொடர்பான விசாரணை தொடங்கியதுமே விசாரணைக்கு ஆஜராக சம்மன் விடுக்கப்பட்டது. ஆனால் இருவர் தரப்பிலும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே அவரை கைது செய்ய இன்டர்போல் உதவியை அமலாக்கப்பிரிவு நாடியது.

கோரிக்கை...

இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் தொடர்புடைய நிரவ் மோடியை கைது செய்யுமாறு ஹாங்காங்கிற்கு இந்தியா கோரிக்கையை விடுத்தது. பாராளுமன்றத்தில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் விகே சிங் பேசுகையில், “சீனாவின் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஹாங்காங் அரசிடம் நிரவ் மோடியை கைது செய்ய கோரிக்கையை வைத்து உள்ளோம்,” என கூறிஉள்ளார். மார்ச் 23-ம் தேதி இந்தியா தரப்பில் ஹாங்காங்கிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. வங்கி மோசடி வெளியாகிய பின்னர் விசாரணை முகமைகளின் கோரிக்கையை ஏற்று இந்திய வெளியுறவுத்துறை இருவரிடன் பாஸ்போர்ட்டையும் ரத்து செய்தது.

சீனா பச்சைக்கொடி

சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிரவ் மோடிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாராண்டை பிறப்பித்து உள்ளது. ஹாங்காங் உடன் இந்திய அரசு ஏற்கனவே குற்றவாளிகளை ஒப்படைப்பது தொடர்பாக ஒப்பந்தம் செய்து உள்ளது. இருப்பினும் சீனாவின் அதிகாரத்தின் கீழ் உள்ள ஹாங்காங் அந்நாட்டிடம் அனுமதி பெற வேண்டும் என்ற நிலையானது இருந்தது. இப்போது நிரவ் மோடியை ஹாங்காங் கைது செய்ய சீனா பச்சைக்கொடி காட்டி உள்ளது. உள்ளூர் சட்டம் மற்றும் நீதித்துறை உதவி ஒப்பந்தங்கள் அடிப்படையில் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ஹாங்காங் நடவடிக்கையை எடுக்க முடியும் என சீனா கூறிஉள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து