ஒலிபெருக்கி பயன்பாட்டை குறைத்து விட்டு மசூதி, தேவாலயங்களில் வாட்ஸ்அப் பயன்படுத்த கானா அரசு உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 17 ஏப்ரல் 2018      உலகம்
Whatsapp Ghana Govt order 2018 4 17

அக்ரா : மேற்கு ஆப்பிரிக்க நாடான கானா தலைநகர் அக்ராவில் மசூதிகளும், தேவாலயங்களும் வழிபாட்டுக்கு மக்களை அழைப் பதற்கு ஒலிபெருக்கி பயன்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டும், இதற்கு பதிலாக வாட்ஸ்அப் பயன்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

வழிபாட்டுத் தலங்கள் அமைந்திருக்கும் பகுதிகளில் பாதசாரி கள் மற்றும் வாகனப் போக்கு வரத்து அதிகம் உள்ளது. இத்துடன் வழிபாட்டுத் தலங்களின் மணியோசை மற்றும் ஒலிபெருக்கி அழைப்பால் அப்பகுதி மக்களுக்கு தொந்தரவு ஏற்படுகிறது. இதை கருத்தில்கொண்டு கானா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதை நியாயப்படுத்தி கானா சுற்றுச்சூழல் அமைச்சர் கே.பிரிம்பாங் போவடெங் கூறும்போது, “மசூதிகளில் தொழுகை குறித்த தகவல்களை வாட்ஸ்அப் மூலம் இமாம்கள் அனுப்பலாம். இதன்மூலம் ஒலிமாசு குறையும். இந்த உத்தரவு சர்ச்சைக்குரியதாக இருந்தாலும் இதுபற்றி நாம் சிந்திக்க வேண்டும்” என்றார்.

ஆனால் இந்த யோசனையை அக்ரா நகர முஸ்லிம்கள் நிராகரித்துள்ளனர். இதுதொடர்பாக இமாம் ஷேக் உசேன் அகமது கூறும்போது, “தினமும் 5 முறை தொழுகைக்கு அழைப்பு விடுக்கிறோம். வாட்ஸ்அப் மூலம் அழைப்பு விடுத்தால் ஒலிமாசு குறையும் என்பது உண்மைதான். ஆனால் இமாம்கள் மாதச் சம்பளம் பெறுவதில்லை. எனவே அவர்கள் இதற்காக செலவிட முடியாது. மேலும் சமூக ஊடகப் பயன்பாடு சமூகத்தில் முற்றிலும் பரவவில்லை. எனவே இது தேவையற்ற நடவடிக்கை” என்றார்.

Racing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்

11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? பொதுமக்கள் கருத்து

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து