முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை சித்திரைப்பொருட்காட்சி நாளை கோலாகலமாக துவக்கம்

வியாழக்கிழமை, 19 ஏப்ரல் 2018      மதுரை
Image Unavailable

மதுரை. - அரசு சித்திரைப்பொருட்காட்சி-2018 மதுரை தமுக்கம் மைதானத்தில் 21.04.2018 அன்று கோலாகலமாக துவங்கப்படவுள்ளது.   அதனையொட்டி தமிழகஅரசின் அனைத்து துறைகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  .கொ.வீர ராகவ ராவ், பார்வையிட்டு ஆய்வு செய்த போது தெரிவித்ததாவது:

மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசு சித்திரைப்பொருட்காட்சி 2018 மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.ஆர்.பி.உதயகுமார் அவர்கள் தலைமையில், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.செல்லூர்.கே.ராஜு அவர்கள் முன்னிலையில், மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜு அவர்கள் 21.04.2018 அன்று திறந்து வைக்கவுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் செய்தித்துறை இயக்குநர் திரு.பொ.சங்கர்,இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ்,இ.ஆ.ப., உள்ளிட்ட நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
மதுரை தமுக்கம் மைதானத்தில்; தமிழ்நாடு அரசின் சார்பில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அரசு சித்திரைப்பொருட்காட்சி 21.04.2018 அன்று தொடங்கி தொடர்ந்து 45 நாட்கள் தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த அரசுப்பொருட்காட்சியில் 27 அரசுத் துறைகள் மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள் மூலம் கண்காட்சி அரங்குகள் அமைத்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி.கே.பழனிசாமி அவர்களின் தலைமையில் செயல்படும் தமிழகஅரசின் திட்;டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் அரசின் திட்டங்கள் அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர நாள்தோறும் கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், நாடகம் போன்ற பல்சுவை நிகழ்ச்சிகளும், பட்டிமன்றம், வினாடி வினா நிகழ்ச்சிகள், இன்னிசை நிகழ்ச்சி, நாட்டுப்புற கலைகள், பாரம்பரிய உணவு மற்றும் சூற்றுச்சூழல் குறித்த கருத்தரங்கம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மக்களின் மனம் கவரும் வகையில் நடத்தப்பட உள்ளது.   எனவே பொதுமக்கள் அனைவரும் பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய தமிழகஅரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் அரசுப்பொருட்காட்சிக்கு வருகை தந்து பயனடைய வேண்டும் என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து