முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை அணியிடம் தோற்றாலும் கவலையில்லை ஜூனியருக்கு ‘கீப்பிங் டிப்ஸ்’ கூறிய தோனி

ஞாயிற்றுக்கிழமை, 29 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

மும்பை: மும்பையில் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வென்றது. ஆனால், இந்தத் தோல்விக்குப் பின் அந்த அணியின் விக்கெட் கீப்பருக்கு தேவையான ஆலோசனைகளை தோனி வழங்கியுள்ளார்.

மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 169 ரன்கள் சேர்த்தது. இந்த இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி 2 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவரும், 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம் பெற்றிருந்தவருமான இஷான் கிஷான் விளையாடி வருகிறார். தோனியின் மாநிலத்தைச் சேர்ந்தவரான இஷான் கிஷான் கீப்பிங் நுணுக்கங்கள் குறித்து போட்டி முடிந்தபின் தோனியிடம் கேட்டார்.

எதிரணிவீரருக்கு எப்படி கீப்பிங் நுணுக்கங்களை கற்றுக்கொடுப்பது என்று முகம் சுளிக்காமல் கீப்பிங் செய்வதில் உள்ள நுணுக்கங்களை இஷான் கிஷானுக்கு சொல்லிக் கொடுத்தார். சில பந்துகள் கீப்பிங் செய்தும் காண்பித்தார். ஏறக்குறைய 45 நிமிடங்கள் வரை இஷான் கிஷானுக்கு கீப்பிங் செய்தல், ஸ்டெம்பிங் செய்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தோனி விளக்கினார்.

இதை இஷான் கிஷாண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ‘கீப்பிங்கில் மிகச்சிறந்த மாஸ்டரிடம் இருந்து டிப்ஸ் பெற்றேன். ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இரு விக்கெட் கீப்பர்களுக்கான உறவு இது’ என்று பதிவிட்டுள்ளார்.

டெஸ்ட் போட்டியில் ஓய்வு பெற்றபோதிலும், ஒருநாள், மற்றும் டி20 போட்டிகளில் தோனியின் விக்கெட் கீப்பிங், ஸ்டெம்பிங் செய்யும் வேகத்துக்கு யாரும் இணையில்லை.

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் காலில் பேட், கையில் கிளவுஸ் அணிந்திருந்த போதிலும் தேர்ட் மேன்வரை ஓடிச் சென்று பந்தை பவுண்டரி செல்லாமல் தோனி தடுத்த நிகழ்வு பாரட்டப்பட்டது. 35 வயது ஆனபின்பும் உடல்தகுதியை தோனி சிறப்பாக பராமரித்துவருகிறார் என்று அனைவராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து