முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்தில் கலெக்டர் .வீரராகவராவ் தலைமையில் ஜமாபந்தி

புதன்கிழமை, 9 மே 2018      மதுரை
Image Unavailable

 மதுரை -மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம், வட்டாட்சியர் அலுவலகத்தில்  மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ் தலைமையில் 1427-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)  நடைபெற்றது.
      இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்   பேசும் பொழுது தெரிவித்ததாவது:
      மதுரை மாவட்டத்தில் இந்த நிதியாண்டிற்கான 1427-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) இன்று (09.05.2018) முதல் 22.05.2018 வரை 10 வட்டங்களில், 51 பிர்கா மற்றும் 665 வருவாய் கிராமங்களில் நடைபெறவுள்ளது.  இந்த ஜமாபந்தி முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் துணை ஆட்சியர்கள் ஆகியோர் தலைமையில் நடைபெறும்.
       வாடிப்பட்டி வட்டத்தில் நடைபெறும் ஜமாபந்தி நேற்று  (09.05.2018) முதல் 18.05.2018 வரை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்திலும், பேரையூர் வட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையில் பேரையூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும், மதுரை மேற்கு வட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர், மதுரை அவர்கள் தலைமையில் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்திலும், திருமங்கலம் வட்டத்தில் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையில் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், மதுரை கிழக்கு வட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர், மேலூர் அவர்கள் தலைமையில் கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்திலும், மதுரை தெற்கு வட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (முத்தரைத்தாள்) அவர்கள் தலைமையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்திலும், மதுரை வடக்கு வட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் அவர்கள் தலைமையில் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்திலும், திருப்பரங்குன்றம் வட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் அவர்கள் தலைமையில் திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலத்திலும், உசிலம்பட்டி வட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அவர்கள் தலைமையில் உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்திலும், மேலூர் வட்டத்தில் உதவி ஆணையர் (கலால்) அவர்கள் தலைமையில் மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெறவுள்ளது.
  இந்த ஜமாபந்தியின் நோக்கமானது வருவாய் ஃ கிராம கணக்குகள், நில ஆவணங்கள் கணக்கு, பயிர் கணக்கு போன்றவை கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலர்கள், புள்ளியியல்துறை அலுவலர்கள் எவ்வாறு பராமரித்து வருகின்றனர் என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.  மேலும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்கள் பெறப்பட்டு இறுதி நாளன்று பெறப்பட்ட மனுக்களுக்கு பதில் மற்றும் ஆணைகள் வழங்கப்படும்.
  எனவே பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி, தங்களது கிராமத்திற்கான ஜமாபந்தி நடைபெறும் நாட்களில் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று தங்களது மனுக்களை வழங்கி கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம் என தெரிவித்தார்.
   இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)  .ராஜசேகரன்,   பல்வேறு அரசுத்துறைகளை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து