முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வார்னேவை பார்த்த உத்வேகம்தான் 4 விக்கெட்டுக்கள் வீழ்த்த காரணம் குல்தீப் யாதவ் மகிழ்ச்சி

புதன்கிழமை, 16 மே 2018      விளையாட்டு
Image Unavailable

கொல்கத்தா: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசுவதற்கு உத்வேகமாக அமைந்ததே வார்னேதான் என குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

அதிரடி ஆட்டம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 48-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 19 ஓவரில் 142 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. முதல் விக்கெட்டுக்கு 4.5 ஓவரில் 62 ரன்கள் குவித்தது ராஜஸ்தான் ராயல்ஸ். இதனால் 200 ரன்னை சர்வ சாதரணமாக தொடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான் சைனமேன் பந்து வீச்சாளரான ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் பந்து வீச அழைக்கப்பட்டார்.

நான்கு விக்கெட்...
இவர் அபாரமாக பந்து வீசி 4 ஓவரில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இந்த போட்டிக்கு முன்பு 12 போட்டிகளில் 9 விக்கெட்டுக்கள் மட்டுமே வீழ்த்தியிருந்தார். இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசி அசத்தினார். தான் சிறப்பாக பந்து வீசியதற்கு ஷேன் வார்னே அங்கிருந்ததுதான் என்று குல்தீப் யாதவ் கூறியுள்ளார்.

மிகப்பெரிய ரசிகன்
இதுகுறித்து குல்தீப் யாதவ் கூறுகையில் ‘‘நான் எப்போதுமே ஷேன் வார்னேயின் மிகப்பெரிய ரசிகன். அவர்தான் என்னுடைய முன்னுதாரணம். அவர் முன்னாள் விளையாடும்போது எப்போதுமே, மாறுபட்ட உத்வேகத்தை பெறுவேன். அவர் முன் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்த விரும்புவேன். போட்டிக்குப்பின் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். நான் ஏற்கனவே இங்கிலாந்து தொடருக்கான என்னுடைய திட்டத்தை தொடங்கிவிட்டேன். இது அவருடன் சிறிய உரையாடல்தான். ஐபிஎல் தொடருக்குப் பின் ஒருவேளை அவருடன் பேசுவதற்கான வாய்ப்பை பெறலாம்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து