முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'ஜுராசிக் பார்க்: ஃபாலன் கிங்டம்' (ஆங்கிலம் மற்றும் தமிழிலும்) ஜூன் 7ல் வெளியீடு

வெள்ளிக்கிழமை, 25 மே 2018      சினிமா
Image Unavailable

மைக்கேல் கிரிச்டனின் 1990 ஆம் ஆண்டு வெளியான 'ஜுராசிக் பார்க்' என்கிற நாவலைத் தழுவி, 1993 ஆம் ஆண்டு பிரபல இயக்குநரான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், அதே பெயரில் ஒரு பிரம்மாண்டமானதொரு திரைப்படத்தை உருவாக்கியிருந்தார். உலக அரங்கில் மிகப் பெரியதோர் வெற்றிப்படமாக அது அமைந்தது. இஸ்லா நுப்லார் என்கிற கற்பனையான தீவு ஒன்றில் டினோசர்   என்கிற ஓர் இனத்தைச் சேர்ந்த ராட்சச உருவிலான மிருகங்கள் வாழ்ந்து வருவதாக அமைக்கப்பட்டிருந்தது! ஓர் உல்லாசபுரியாக, தீம் பார்க் பாணியில் அதை வடிவமைத்து வருவாய் ஈட்டுவதற்கான ஒரு வாய்ப்பு உருவாக்கப்பட்டது. எதிர்பாராத விதமாக விபரீதங்கள் நிகழ, மனித இனத்தைத் தாக்க முற்படுகிறது, டினோசர் இனம்! இந்தக் கதைக்கருவின் அடிப்படையில், 'தி லாஸ்ட் வேர்ல்ட் (1997)', 'ஜுராசிக் பார்க் 3 (2001)', மற்றும் 'ஜுராசிக் வேர்ல்ட் (2015)' ஆகிய படங்கள் வெளியாகி வசூலில் புதிய சாதனைகள் படைத்திட்டன.'ஜுராசிக் பார்க்: ஃபாலன் கிங்டம்' என்கிற இப்புதிய படைப்பு, அக்கதைக் களத்தை, மீண்டுமொரு முறை புதுப்பித்து, டினோசர் இன விலங்குகளில் புதிய சேர்க்கைகளை நிகழ்த்தி, அத்தீவிற்குப் புதியதொரு சுற்றுலாவை அரங்கேற்றுகிறது!பழைய நிகழ்வுகள் நிறைவு பெற்று மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், அத்தீவில் உள்ள எரிமலை புத்துயிர் பெற, புதியதொரு அத்தியாயம் தொடங்குகிறது! ஓவன் (கிறிஸ் ப்ராட்) மற்றும் கிளாரி (ப்ரைஸ் டல்லாஸ் ஹோவர்ட்) ஆகிய இருவரும், அழிந்துவரும் டினோசர் இனத்தைக் காக்க முற்படும் பணியில் ஈடுபடுகின்றனர்! அக்கட்டத்தில், சுயநலம் கொண்ட சிலரது சதிச்செயல்கள் பேராபத்துகளுக்கு வழிவகுக்கிறது. 'இண்டோராப்டர்' என்கிற ஓர் அபாயகரமான டினோசர் கட்டுக்காவலில் இருந்து தப்பிவிடுகிறது.1993லிருந்து அனைத்து ஜுராசிக் தொடர் படங்களிலும் நடித்துள்ள ஜெஃப் கோல்ட்ப்ளம், இப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், இதன் தயாரிப்பாளர்களில் ஒருவர். மைக்கேல் கியாச்சினி இசையமைக்க, ஆஸ்கர் ஃபெளரா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜே.ஏ.பயோனா படத்தை இயக்கியுள்ளார். ஹன்சா பிக்சர்ஸ் வெளியீடு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து