முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னறிவிப்பு ஏதுமின்றி எல்லை கிராமத்தில் வட - தென் கொரிய அதிபர்கள் திடீர் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 27 மே 2018      உலகம்
Image Unavailable

சியோல்: வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஆகிய இருவரும் முன்னறிவிப்பு எதுவுமின்றி எல்லை கிராமத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கிம் ஜோங்குடனான சந்திப்பு ஏற்கெனவே திட்டமிட்டபடி ஜூன் 12-ம் தேதி நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்த நிலையில், இது தொடர்பாக இரு கொரிய நாடுகளின் தலைவர்களும் விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து தென் கொரிய அதிபர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வட - தென் கொரியா நாடுகள் இடையே, ராணுவம் விலக்கப்பட்ட சமாதான எல்லை கிராமமான பான்முன்ஜோமில், இரு நாட்டு அதிபர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஏற்கெனவே, அதிபர் மூன் ஜே-இன் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் ஆகியோரிடையே கடந்த மாதம் 27-ம் தேதி நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்கச் சந்திப்பின் போது மேற்கொள்ளப்பட்ட பான்முன்ஜோம் பிரகடனம் குறித்து இரு தலைவர்களும் தங்களது கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

மேலும், கிம் ஜோங்-உன் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையிலான சந்திப்பு, சிங்கப்பூரில் வரும் ஜூன் மாதம் 12-ம் தேதி நடைபெறுவதை உறுதி செய்வது குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.
இந்தச் சந்திப்பு குறித்த விரிவான அறிக்கையை அதிபர் மூன் ஜே-இன் வெளியிடுவார் என்று அதிபர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து