டிரம்பை சந்திக்க ஆர்வம்: ஓட்டலில் தங்க ஒரு நாள் இரவுக்கு ரூ. 38 ஆயிரம் செலவிட்ட இந்திய வம்சாவளி நபர்

புதன்கிழமை, 13 ஜூன் 2018      உலகம்
trump1

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் டிரம்பை சந்திக்கும் ஆர்வத்தில் ஓட்டலில் தங்க ஒரு நாள் இரவுக்கு இந்திய வம்சாவளி நபர் ஒருவர் ரூ.38 ஆயிரம் செலவு செய்துள்ளார்.

சிங்கப்பூரின் சென்டோசா தீவில் ஷாங்ரி லா ஓட்டலில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் இடையே வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு நடந்தது.

ரூ.38 ஆயிரம்...
இந்த ஓட்டலுக்கு தங்க வரும் டிரம்பை சந்திப்பதற்காக மலேசியாவை சேர்ந்த இந்திய வம்சாவளி நபரான மகராஜ் மோகன் (வயது 25) ரூ.38 ஆயிரம் செலவு செய்துள்ளார். டிரம்பை சந்திக்க ஒரு சதவீத வாய்ப்பு உள்ளது என தனக்கு தெரியும் என கூறியுள்ள மோகன் டிரம்புடன் ஒரு செல்வி எடுத்து கொள்ள விரும்பியுள்ளார்.  ஆனால், அதிபர் டிரம்ப் பயணம் செய்த லிமோசின் கார் செல்லும் வழியில் நின்று மோகன் செல்பி ஒன்று எடுத்துள்ளார்.


இந்த வார ராசிபலன் - 24.06.2018 முதல் 30.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 24.06.2018 to 30.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து