முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு ஏற்பாடுகள் : உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு

வியாழக்கிழமை, 5 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கவர்னர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று உயர்மட்ட ஆலோசனையில் ஈடுபட்டார்.

கவர்னர் ஆட்சி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை பா.ஜ.க. சமீபத்தில் விலக்கி கொண்டது. இதைதொடர்ந்து அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி கவிழ்ந்தது. கவர்னர் வோரா தலைமையில் கவர்னர் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு முதல்முறையாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் காஷ்மீர் சென்றடைந்தார். அவருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபா உள்ளிட்ட உயரதிகாரிகளும் சென்றுள்ளனர். அம்மாநில ராஜ் பவனில் கவர்னர் என்.என்.வோராவுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

ஆலோசனை கூட்டம்

இந்நிலையில், ஸ்ரீநகரில் நேற்று நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். இக்கூட்டத்தில் கவர்னர் என்.என்.வோரா, கவர்னரின் அலோசகர்களான பி.பி.வியாஸ், விஜய குமார், குர்ஷித் அகமது கானி, உள்துறை செயலாளர் ராஜீவ் கௌபா, காஷ்மீர் டி.ஜி.பி வைட் ஆகியோர் கலந்துகொண்டனர். அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், ஆட்சி கலைப்பிற்கு பிறகு மாநிலத்தில் நிலவும் சூழல், மாநிலத்தில் செயல்படுத்த வேண்டிய பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் காஷ்மீர் இளைஞர்கள் நலன் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக ராஜ்பவன் செய்திதொடர்பாளர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, அமர்நாத் கோவிலுக்குச் சென்ற ராஜ்நாத் சிங், அங்கு பனி லிங்கத்தை தரிசித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து