முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாம்பன் ரயில் தூக்கு பாலத்தின் உறுதி தன்மை குறித்து ரயில்வே பொறியாளர் ஆய்வு.

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜூலை 2018      ராமநாதபுரம்
Image Unavailable

  ராமேசுவரம்,ஜூலை,8: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில் பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள தூக்கு பாலத்தின் உறுதி தன்மைகள் குறித்து தெற்கு ரயில்வே  தலைமை முதன்மை பொறியாளர் கஸ்வான் நேற்று ஆய்வு செய்தார். 
  பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியை இணைக்கும் கடல் பகுதியான பாம்பன் பகுதி கடலில் அமைக்கப்பட்டுள்ள ரயில் பாலம் கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேல் கடந்து விட்டது. இந்த பாலத்தில் வரலாற்று சிறப்பு மிக்க வகையில் கப்பல் கடந்து செல்லுவதற்காக திறந்து மூடும் வகையில்  தூக்கும் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் கடல் காற்றினால் அரிப்பு தன்மை ஏற்பட்டு  தன்மையை இழந்து வருகிறது.இதனால் பழமையான இந்த தூக்கு பாலத்தை அகற்றி  அதி நவீன முறையில் 35 கோடி மதிப்பில்  இயந்திர மூலம் மேல் நோக்கி திறந்து மூடும் வகையில் புதிய தூக்கு பாலம் அமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் புதிய தூக்குபாலம் அமைக்கும் வரை இந்த தூக்குபாலத்தில் அரிப்பு தன்மை ஏற்பட்டு சேதமடைந்த பகுதிகளையும்,அதன் உறுதி தன்மையையும் பார்வையிடவும்,பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு கர்டர்கள்,தண்டவாளம், ஆகியவற்றின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்வதற்காக    சென்னையிலிருந்து தெற்கு ரயில்வேயின் தலைமை முதன்மை பொறியாளர் கஸ்வான் பாம்பன் ரயில் நிலையத்திலிருந்து ட்ராலி மூலம் வருகை தந்தார். பின்னர் அங்கு தூக்கு பாலத்தை திறக்கப்பட்டு  அதன் உறுதி தன்மையும்  குறித்து ஆய்வு நடத்தினார். பின்னர் தொடர்ந்து ட்ராலி மூலம் பாலத்தில் சென்று தண்டவாளம் மற்றும் கர்டர்களை பார்வையிட்டு ரயில்வே பொறியாளர்களிடம் ஆலோசணை நடத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து