முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாத்தங்குடி கிராமத்தில் பொதுவுடமை தியாகிகளின் திருவுருவப் படத்திறப்புவிழா: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்-இ.கம்யூ மாநிலச்செயலாளர் முத்தரசன் பங்கேற்பு:

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜூலை 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்- திருமங்கலம் அருகேயுள்ள சாத்தங்குடியில் நடைபெற்ற பொதுவுடமை தியாகிகளின் திருவுருவப் படத்திறப்பு விழாவில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுவுடமைக்காக போராடிய தியாகிகள் சவுரி,கருத்தக்கண்ணன்,காஜாமைதீன் ஆகியோரது திருவுருவப் படங்களை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்கள்.
மூச்சுக்காற்று நிற்கும் வரை பொதுவுடமைக்காக போராடிய தியாகிகள் சி.சவுரி,என்.கருத்தக்கண்ணன்,கே.காஜாமைதீன் ஆகியோரது திருவுருப் படங்களின் திறப்புவிழா திருமங்கலம் அருகேயுள்ள சாத்தங்குடி கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.தியாகிகளின் குடும்பத்தினர் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த விழாவில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்,தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் என்.எஸ்.வி.சித்தன் ஆகியோர் கலந்து கொண்டு தியாகிகளின் திருவுருவப் படங்களை திறந்து வைத்து மலர் மாலைகள் அணிவித்து மரியாதை செய்தனர்.பின்னர் மறைந்த தியாகிகளின் குடும்பத்தினருக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் கைத்தறி ஆடைகள் அணிவித்து கௌரவித்தனர்.
விழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: மக்களுக்கு பணியாற்றுவதில் இயக்க பேதங்கள் கிடையாது.வீடு தேடி வந்தவர்களை வாசலுக்கு வந்து வரவேற்று உபசரிப்பது தமிழர்களின் பண்பாடாகும். பொதுவுடமை தியாகிகளை போற்றிடும் விதத்திலே இந்த விழாவில் நாங்கள் கலந்து கொண்டுள்ளோம்.தியாகிகளுக்கு மரியாதை செய்வதில் அம்மாவிற்கு நிகர் யாருமில்லை.தியாகிகளை மதிப்பதில் அம்மா தனி முத்திரை பதித்தவர்.அவரிடம் பயிற்சி பெற்ற நாங்கள் தியாகிகளுக்கு உரிய மரியாதை செய்து அவர்களது தியாகங்களை போற்றி வருகிறோம்.அதே போல் அம்மாவின் அரசு மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு செயல்படும் அரசாக திகழ்கிறது என்று பேசினார்.முன்னதாக பேசிய முன்னாள் எம்.பி.,என்.எஸ்.வி.சித்தன் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மேற்கொண்டு வரும் மக்கள் நலத்திட்ட பணிகளுக்கும்,எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரை தோப்பூருக்கு கொண்டு வந்ததற்கும் நன்றி தெரிவித்து பேசினார்.
இவ்விழாவில் மதுரை புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன்,சார்புஅணி நிர்வாகிகள் திருப்பதி,தமிழ்ச்செல்வம்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,ஒன்றிய செயலாளர்கள் மகாலிங்கம்,அன்பழகன்,ராமசாமி,ஒன்றிய துணை செயலாளர் சுகுமார்,மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.ஜெயராம்,சி.பி.ஐ தேசியக்குழு சேதுராமன்,மாவட்டச் செயலாளர் பா.காளிதாஸ்,நகர் மாவட்ட செயலாளர் சரவணன்,முன்னாள் எம்.எல்.ஏ.,அண்ணாத்துரை,மாநிலக்குழு கந்தசாமி,தி.மு.க ஒன்றிய செயலாளர் தனபாண்டியன்,நகர் தி;.மு.க பொறுப்பாளர் முருகன்,ம.தி.மு.க விவசாய அணி மாநில தலைவர் சக்திவேல்,ம.தி.மு.க செயலாளர் தர்மராஜ்,விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி,வடக்கு ஒன்றிய செயலாளர் ஆட்டோ சுப்பிரமணி,மாவட்டக்குழு சந்தாளம்,தாலுகா பொருளாளர் சிங்காரவேலு மற்றும் சிபிஐ நிர்வாகிகள் மொக்கராஜ்,நடராஜன்,சையது,நல்லகுரும்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து