முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ.300 கோடி பணம்

திங்கட்கிழமை, 16 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

ஜெனிவா : சுவிட்சர்லாந்து நாட்டு வங்கியில் இந்தியர்கள் டெபாசிட் செய்திருக்கும் ரூ.300 கோடி பணம் பல ஆண்டுகளாக உரிமை கோரப்படாமல் இருக்கும் தகவல் தெரிய வந்துள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டு வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட அனைத்து நாட்டவர்களின் தகவல்களும் கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்நாட்டு அரசால் வெளியிடப்பட்டது.

இதை பயன்படுத்தி, சுவிட்சர்லாந்து வங்கியில் இருக்கும் பணத்தை உண்மையான உரிமையாளர்கள், அவரது பிரதிநிதிகள் ஆகியோர் உரிய ஆவணத்தை காண்பித்து உரிமை கோர வழிவகை செய்யப்பட்டது. இதன்படி, உரிய ஆவணத்துடன் பணத்தை உரிமை கோரினால், அவர்களது பெயர், ஏற்கெனவே வெளியிடப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கப்படும். இதன்படி 40 கணக்குகளுடன் தொடர்புடைய விவரம் நீக்கப்பட்டது.

அதேநேரத்தில், தொடர்ந்து 3,500 கணக்குகள் குறித்த விவரம் இன்னமும் தெரியவில்லை. இதில் இந்தியர்களுடன் தொடர்புடைய 6 கணக்குகளும் அடங்கும். அந்த கணக்குகளில் இருக்கும் பணத்தை இதுவரை யாரும் உரிமை கோரவில்லை.

இந்த 6 கணக்குகளில், 3 கணக்குகள் மும்பையைச் சேர்ந்த பெர்ரி வாசெக், பெர்னர்ட் ரோஸ் மேரி, டேராடூனைச் சேர்ந்த பகதூர் சந்திர சிங் ஆகியோருக்கு சொந்தமானது ஆகும். எஞ்சிய 3 கணக்குகள், இந்திய வம்சாவளியினருக்கு சொந்தமானது ஆகும். அவர்களில் ஒருவர், பிரான்ஸ் தலைநகர் பாரிûஸ சேர்ந்த டாக்டர் மோகன் லால் என்று தனது பெயரை குறிப்பிட்டுள்ளார். 2ஆவது நபர், பிரிட்டன் தலைநகர் லண்டனை சேர்ந்த சுசா யோகேஷ் பிரபுதாஸ் எனத் தெரிவித்துள்ளார். 3ஆவது நபர், தனது பெயரை கிஷோர் லால் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் தனது முகவரியை வெளியிடவில்லை.

இந்தியர்களுக்கு சொந்தமானதாக கூறப்படும் இந்த 6 கணக்குகளிலும் மொத்தம் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பது உறுதியாக தெரியவில்லை. எனினும், ரூ.300 கோடி பணம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த 6 கணக்குகளும், கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. அதை யாரும் உரிமை கோராதபட்சத்தில், தொடர்ந்து பட்டியலில் 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை இருக்கும். உரிய ஆவணத்துடன் யாரும் அதை உரிமை கோரும்பட்சத்தில், பட்டியலில் இருந்து அந்த கணக்கு விவரம் நீக்கப்படும்.

முன்னதாக, சுவிட்சர்லாந்து நாட்டு தேசிய வங்கியால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தங்கள் நாட்டு வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணம் ரூ.7,000 கோடியாக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதை முன்வைத்து மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. எனினும், சுவிட்சர்லாந்து வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் இந்தியர்களின் பணம் அனைத்தையும் கருப்புப் பணம் என்று கூற முடியாது என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து