முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுவர்களை மீட்க வந்த ஆஸ்திரேலியர்களுக்கு சட்டப்பாதுகாப்பு வழங்கிய தாய்லாந்து

செவ்வாய்க்கிழமை, 17 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

பாங்காக்: குகைக்குள் சிக்கியிருந்த சிறுவர்களை மீட்பதில் முக்கிய பங்காற்றிய ஆஸ்திரேலிய நீச்சல் வீரர் மற்றும் மயக்க மருந்து நிபுணருக்கு தாய்லாந்து அரசு முன்கூட்டியே சட்டப்பாதுகாப்பு வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறுவர்களை உயிருடன் மீட்கும் மிகக் கடுமையான முயற்சியில் தோல்வி ஏற்பட்டால், அதற்காக அந்த இருவர் மீதும் வழக்குத் தொடரப்படுவதைத் தவிர்ப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியில்,
தாய்லாந்து குகைக்குள் சிக்கியிருந்த 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து பயிற்சியாளரை மீட்பதற்காக, குகை வெள்ளத்தில் நீந்துவதில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மயக்க மருந்து நிபுணர் ரிச்சர்ட் ஹாரிஸ் மற்றும் நீச்சல் வீரர் கிரெயிக் சேலன் ஈடுபடுத்தப்பட்டனர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இந்த இருவரும், சிறுவர்களை மீட்பதில் மிக முக்கியப் பங்காற்றினர்.

எனினும், ஆபத்துகள் நிறைந்த அந்த மீட்புப் பணியில் தோல்வி ஏற்பட்டால், அதற்காக அந்த இருவர் மீதும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படாது என்பதை உறுதி செய்வதற்காக, அவர்களுக்கு தாய்லாந்து அரசு முன்கூட்டியே சட்டப் பாதுகாப்பு வழங்கியது.

ஆஸ்திரேலியா மற்றும் தாய்லாந்து அதிகாரிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அந்த தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், இந்தத் தகவல் குறித்து கருத்து கூற ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சகம் மறுத்து விட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து