முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமித்ஷாவுக்கு கறுப்புக் கொடி காட்டிய மாணவியின் தலைமுடியை பிடித்து இழுத்த போலீஸ்

சனிக்கிழமை, 28 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

அலகாபாத்: பா.ஜ.க. தலைவர் அமித் ஷா சென்ற வாகனத்தை மறித்து கருப்புக் கொடி காட்டிய இரண்டு பெண்களை பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீஸார் தாக்கியுள்ளனர். அதுவும் ஒரு மாணவியின் தலைமுடியைப் பிடித்து இழுத்தது பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அலகாபாத்துக்கு வந்திருந்த அமித்ஷாவுக்கு அலகாபாத் பல்கலை மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து கறுப்புக் கொடி காட்டினர். அப்போது போலீசார் 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவரைப் பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்தனர். இதன் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவ சர்ச்சை கிளம்பியுள்ளது. ஒரு பெண்ணை தடியால் அடித்ததோடு காவல்துறையை சேர்ந்த இன்னொரு போலீசார் மற்றொரு மாணவியின் தலைமுடியைப் பிடித்து இழுத்தார். வீடியோவில் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் வேகமாக வந்து தலையிட்டு அடிக்க வேண்டாம் என்று தடுத்ததும் பதிவாகியுள்ளது. இந்த 3 மாணவர்களும் சமாஜ்வாதி கட்சியின் இளைஞர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், நேஹா யாதவ், ரமா யாதவ், கிஷன் மவுரியா ஆகிய 3 மாணவர்களூம் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டதாகவும் காவல்துறை உயரதிகாரி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து