முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடிமக்கள் தேசியப் பதிவேடு வரைவுப் பட்டியல் வெளியீடு - 40 லட்சம் பேர் சேர்க்கப்படாததால் சர்ச்சை

திங்கட்கிழமை, 30 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

கவுகாத்தி : அசாமில் நேற்று வெளியிடப்பட்ட குடிமக்கள் தேசிய வரைவுப் பதிவேட்டில் 40 லட்சம் பெயர்கள் விடுபட்டுள்ளது சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

அசாமில் வங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாக குடியேறியவர்கள் வசிப்பதாக சர்ச்சை எழுந்து வந்தது. இதைத் தொடர்ந்து குடிமக்களுக்கான தேசிய பதிவேடு ஒன்றை உருவாக்குவது என்று தீர்மனிக்கப்பட்டு இது தொடர்பான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்நிலையில் நேற்று வெளியிடப்பட்டுள்ள அசாம் குடிமக்கள் தேசிய வரைவுப் பதிவேட்டில் 40 லட்சம் பெயர்கள் விடுபட்டுள்ளது சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக இந்த திட்டத்திற்கான ஒருங்கிணைப்பாளர் பிரதீக் கஜிலா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

குடிமக்கள் தேசிய வரைவுப் பதிவேட்டில் இடம்பெறுவதற்காக மொத்தம் 3,29,91,384 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களில் 2,89,83,677 பேர் குடிமக்களின் தேசிய பதிவேட்டில் சேர்க்கப்பட தகுதியுள்ளவர்கள் ஆவார்கள் என்று கண்டறியப்பட்டு அவர்களது பெயர்கள் இடம்பெறுள்ளது. 40 லட்சம் பேர்களது பெயர்கள் பதிவேட்டில் சேர்க்கப்படவில்லை. இவர்கள் இப்போது இந்தியாவின் சட்டவிரோத குடிமக்களாக அறியப்படுகின்றனர்.

பெயர் இடம்பெறாதவர்கள் குடிமக்கள் தேசிய பதிவு ஆணையத்தில் முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது, அதில் திருப்தி இல்லையென்றால் நீதிமன்றங்களை அணுகலாம். இறுதி வரைவில் பெயர் சேர்க்கப்படாத நபர்கள் மற்றும் அவர்களதம் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் ஆகியவற்றை முறையீடு செய்வதற்கு போதுமான கால அவகாசம் வழங்கப்படும். குடிமக்கள் தேசிய வரைவுப் பதிவேட்டு வெளியீட்டைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் 7 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து