முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணு ஆயுத சோதனையை தொடர்ந்து நடத்தும் வடகொரியா : ஐ.நா. குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 4 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : வடகொரியா தொடர்ந்து அணுஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது என்று ஐக்கிய நாடுகள் சபை குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளை வடகொரியா மீறிவிட்டதாகவும் இதற்கு ரஷ்யா உதவியதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ரகசியமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடகொரியா மீது அமெரிக்க விதித்த பொருளாதாரத் தடைகளை ரஷ்யா மீறுவதை அமெரிக்கா கண்டித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோ கூறும் போது, ரஷ்யாவின் செயல் கண்டித்தக்கது. வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்,  டிரம்ப்புக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து