காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: ராணுவ வீரர்கள் 4 பேர் வீரமரணம்

ஜம்மு, காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில் ஒரு ராணுவ மேஜர் உட்பட 4 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
காஷ்மீரின் குரேஷ் பகுதியில் நேற்று சந்தேகத்திற்குரிய வகையில் பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ராணுவத்தினர் ஊடுருவலை தடுக்க முயற்சித்தனர். அப்போது ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த தாக்குதலில் ஒரு ராணுவ மேஜர் மற்றும் 3 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
View all comments