முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஜினிக்கு அரசியல் வரலாறு தெரியாது: அமைச்சர் ஜெயகுமார் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 14 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தி.மு.க. தலைவர் கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் ரஜினி பேசியது அவருக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை என்பதை காட்டுகிறது.. ஷூட்டிங்கும், மீட்டிங்கும் ஒன்றாகி விட்டது. ரஜினிக்கு தமிழக அரசியல் வரலாறு தெரியாது என்று கடுமையாக தாக்கியுள்ளார் அமைச்சர் ஜெயகுமார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

எம்.ஜி.ஆர். ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது அவர் இப்படி பேசி இருந்தால் நடமாடி இருக்க முடியுமா? கருணாநிதியின் தொண்டர்களை தன்பக்கம் இழுக்க பார்க்கிறார் ரஜினி. மேலும், நினைவேந்தல் நிகழ்ச்சியை முழு நேர அரசியல்வாதியாக மாற பயன்படுத்தி உள்ளார். எம்.ஜிஆர், ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ரஜினிகாந்த் பேசி இருக்ககூடாது.

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கொடுக்க வேண்டிய அனைத்து மரியாதைகளையும் தமிழக அரசு கொடுத்தது. 5 வழக்குகள் நிலுவையில் இருந்ததால் தான் மெரீனாவில் இடம் கொடுக்க முடியாது என்றோம். நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்தின் சந்தர்ப்ப அரசியல் இங்கு எடுபடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து