முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் சீனா மீண்டும் ஊடுருவல்

செவ்வாய்க்கிழமை, 14 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : எல்லைப் பகுதியில் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அங்கு பதட்டம்  நிலவி வருகிறது.

சாலை அமைக்க...

இந்தியா, சீனா, பூடான் நாடுகளின் எல்லையில், சிக்கிம் மாநிலத்தின் டோக்லாம் எல்லைப்பகுதி அமைந்துள்ளது. இங்கு 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் சீன ராணுவம் சாலை அமைக்க முயன்றது. இதை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். இதனால், ஏற்பட்ட சிறிய மோதலில் இரு தரப்பு நாட்டு ராணுவத்தினரும் படைகளைக் குவித்ததால் பதற்றம் ஏற்பட்டது. அதன் பின், இந்தியா, சீன தூதரக மட்டத்தில் நடந்த சுமுக பேச்சுக்கு பின், இரு நாடுகளும் தங்களின் படைகளை வாபஸ் பெற்றன.

தொடர்ந்து டோக்லாம் எல்லையில் கட்டுமான நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளி வந்தன. கடந்த ஜூலை மாதம் இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் ஊடுருவியது. பின்னர் இந்திய வீரர்கள் தொடர்ந்து கொடி அணிவகுப்பு நடத்தியதால் சீன வீரர்கள் திரும்பி சென்றனர்.

மீண்டும் ஊடுருவல்

இந்நிலையில், சீனா மீண்டும் இந்திய எல்லைப்பகுதிக்எல்லையில் சீனா மீண்டும் ஊடுருவல் குள் ஊடுருவியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. லடாக்கின் கிழக்குப்பகுதியில் உள்ள டெம்சாக் பகுதியில் 400 மீட்டர் தொலைவுக்கு ஊடுருவிய சீன ராணுவம், 5 டென்ட்களை அமைத்துள்ளது. அதன் பின்னர் ராணுவ அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து 3 டென்ட்களை சீன ராணுவம் அகற்றியது. மீதமுள்ள இரண்டு டென்ட்டுகளை சீன வீரர்கள் இன்னும் தங்கியிருக்கின்றனர். இதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து