முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகைகளுக்கு பணம் கொடுத்த விவகாரம்: ட்ரம்புக்கு எதிராக வழக்கறிஞர் வாக்குமூலம்

வியாழக்கிழமை, 23 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,அமெரிக்க அதிபர் தேர்தலின்போது நடிகைகளுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிராக அவரது முன்னாள் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடந்த 2016 நவம்பர் 8-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்பும் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும் போட்டியிட்டனர்.

அப்போது டொனால்டு ட்ரம்ப் மீது நடிகைகள் ஸ்ட்ரோமி டேனியல்ஸ், கெரன் மெக்டக்கால் ஆகியோர் பாலியல் புகார் தெரிவித்தனர்.

இரு நடிகைகளும் ட்ரம்புக்கு எதிராக பொதுஅரங்கில் பேசாமல் இருப்பதற்கு ட்ரம்பின் அப்போதைய வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் பெரும் தொகையை கொடுத்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பான வழக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது தன் மீதான குற்றச்சாட்டை கோஹன் ஒப்புக் கொண்டார்.

அவர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், “வேட்பாளரின் (ட்ரம்ப்) அறிவுறுத்தலின்படி நடிகை களுக்கு பணம் கொடுத்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

இது தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு என்பதால் மைக்கேல் கோஹனுக்கு 65 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வழக்கறிஞர் கோஹனின் வாக்குமூலம் அதிபர் ட்ரம்புக்கு அரசியல்ரீதியாக பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

டொனால்டு ட்ரம்பின் முன்னாள் தேர்தல் பிரச்சார தலைவர் பால் மனாபோர்ட் மீது வங்கி மோசடி, வரிஏய்ப்பு தொடர்பாக புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பான வழக்கு வெர்ஜினியா மாகாணம் அலெக்சாண்டிரியா நகரில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்றது.
பால் மனாபோர்ட் மீது 18 குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இதில் 8 குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என்று நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதாவது 5 வரிஏய்ப்பு மோசடிகள், 2 வங்கி பரிவர்த்தனை மோசடி, வெளி நாட்டு வங்கிக் கணக்கை மறைத்தது தொடர்பாக அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு அதிகபட்சம் 80 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து