முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானுக்கான நிதி ரூ. 2,130 கோடி ரத்து அமெரிக்கா முடிவு!

திங்கட்கிழமை, 3 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,பாகிஸ்தானின் பாதுகாப்புக்கு அளிக்க திட்டமிடப்பட்டிருந்த ரூ.2,130 கோடி நிதியை ரத்து செய்வதென்று அமெரிக்கா முடிவு செய்துள்ளது. லஷ்கா்-ஏ-தொய்பா, ஹக்கானி குழு உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் கடுமையான நடவடிக்கைகளை எடுக்காதது உள்ளிட்ட காரணங்களுக்காக, இந்த முடிவுக்கு அமெரிக்கா வந்துள்ளது.

இது குறித்து வாஷிங்டனில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடா்பாளா் கோன் பால்க்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:-அமெரிக்க அதிபா் டிரம்பின் தெற்காசிய கொள்கையை ஆதரிக்கும் வகையில், உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதில் பாகிஸ்தான் தோல்வியடைந்து விட்டது. இதே போல், ஹக்கானி குழு, லஷ்கா் -இ -தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராகவும் பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. எனவே பாகிஸ்தானுக்கு அளிக்க திட்டமிடப்பட்டிருந்த ரூ.2,130 கோடி நிதியை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் கோரியுள்ளது. செப்டம்பா் மாதம் 30-ஆம் தேதிக்கு முன்பு நாடாளுமன்றத்தின் முடிவு தெரிந்து விடும். அதன் பிறகு, இந்த நிதியை அமெரிக்க ராணுவத்தின் பிற முக்கிய தேவைகளுக்கு பயன்படுத்த தீா்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியையும் சோ்த்து, பாகிஸ்தானுக்கு அளிக்க திட்டமிடப்பட்டிருந்த 800 மில்லியன் டாலா் நிதி அமெரிக்க பாதுகாப்புத் துறையால் ரத்து செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாத விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு சாதகமாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சா் ஜேம்ஸ் மேட்டிஸ் சான்றிதழ் அளிக்காததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் பால்க்னா்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து