முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிலிப்பைன்சில் வீசிய மாங்கட் சூறாவளிக்கு 40 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 16 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

மணிலா,பிலிப்பைன்ஸில் வீசிய மாங்கட் சூறாவளி காரணமாக இதுவரை 40 பேர் மரணம் அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
பிலிப்பைன்ஸில் வீசியமாங்கட் சூறாவளி அந்த தீவையே மொத்தமாக புரட்டி போட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அதிகாலை ஆரம்பித்த இந்த சூறாவளி சுமார் 28 மணி நேரம் நீடித்தது. ஆனால் இன்னும் இது முழுமையாக கரையை கடக்கவில்லை. இந்த சூறாவளி குறித்து ஒரு வாரத்திற்கு முன்பே எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. இதனால், அங்கு சூறாவளி தாக்கும் என்று கருதப்பட்ட நகரங்களில் இருந்து 5 லட்சம் ஏற்கனவே வெளியேற்றப்பட்டு விட்டனர். அதே போல் 3 லட்சம் பேர் தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த சூறாவளி காரணமாக 20 ஆயிரத்திற்கு அதிகமான வீடுகள் முற்றிலும் சேதமடைந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் சூறாவளியின் பாதிப்பு முடியாததால் உண்மையான சேதத்தை கணக்கிட சில நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. இந்த சூறாவளியால் இதுவரை 40 பேர் மரணம் அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூறாவளி தற்போது சீனாவை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. சீனாவிற்கும், ஹாங்காங்கிற்கும் இதனால் சூறாவளி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து