முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடைக்கானல் கிறிஸ்தவ கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கு

திங்கட்கிழமை, 17 செப்டம்பர் 2018      திண்டுக்கல்
Image Unavailable

கொடைக்கானல் - கொடைக்கானல் கிறிஸ்தவ கல்லூரியில் பண்ணாட்டு கருத்தரங்கம் நடந்தது.
 இக் கல்லூhயியின் ஆங்கிலத்துறையும், சமூகப் பணித்துறையும் இணைந்து இந்த கருத்தரங்கினை நடத்தியது. ஒருங்கிணைந்தல் மற்றும் பாதுகாத்தலில் சமூக ஊடகம், இலக்கியங்களின் கடமைகளும் அழகியலும் என்ற தலைப்பில் இக் கருத்தரங்கம் நடந்தது.
 சிறப்பு விருந்தினரான செல்வி ஸ்மிதா கூறியதாவது. இந்த கருத்தரங்கு தற்போதைய தலைமுறையின் தற்காலத்திய தலைப்பிற்கு ஏற்ப அமைக்கப்பட்டிருக்கிறது. ஊடகம் மற்றும் இலக்கியம் வாழ்க்கை மற்றும் தொழில் பற்றிய அனைத்து துறைகளிலும் அறிஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மிகவும் பொருந்தக் கூடியது இந்த அரங்கு. இந்த அரங்கு சார்ந்த காகித விளக்கங்களும் நேர்மையாகவும் முழுமையாகவும் இருந்தது என்றார்.
 பேராசிரியர் இமானுவேல் பாபு கூறியதாவது: இக் கருத்தரங்கிற்கு தேர்வு செய்யப்பட்ட தலைப்பின் ஒவ்வொரு பரினாமமும அதன் சொந்த இரட்டை பக்கங்களாகும். சமுதாயம் ஊடகம் மற்றும் இலக்கியம் தங்கள் துறைகளின் ல்லது மற்றும் கெட்டதை செய்கின்றது. அந்தத் துறையை ஒவ்வொரு மாணவரும் வாழ்க்கை தரத்தை உயர்த்த முனைய வேண்டும் என்றார். முன்னதாக இந்த கருத்தரங்கினை கல்லூரி தாளாளர் டாக்டர் சாம் ஆபிரகாம் துவக்கி வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து