முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரகங்களை ஸ்கேன் செய்த நாசாவின் புகைப்படம்

புதன்கிழமை, 19 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

நியூயார்க் : நாசா நிறுவனம் நமது அண்டத்தில் உள்ள கிரகங்களை ஸ்கேன் செய்வதற்காக அனுப்பிய டெஸ் என்று சாட்டிலைட் தற்போது புகைபடம் ஒன்றை அனுப்பி உள்ளது.

டெஸ் அனுப்பும் முதல் புகைப்பட இதுதான் என்று கூறப்பட்டு இருக்கிறது. நாசா நிறுவனம் வானத்தில் இருக்கும் கிரகங்களை ஸ்கேன் செய்வதற்காக அனுப்பிய டெஸ் என்று சாட்டிலைட் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது இதுவரை 8,400 கிரகங்களை கண்டுபிடித்து இருக்கிறது. வானத்தில் உள்ள 85 சதவிகித பகுதிகளை ஸ்கேன் செய்ய அனுப்பப்பட்ட இது இதுவரை 15 சதவிகிதத்தை ஸ்கேன் செய்துள்ளது.

இந்த நிலையில்தான் தற்போது இந்த சாதனம், புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. பூமியில் இருந்து தெற்கு வானிலை பல கோடி கிலோ மீட்டர் தூரத்தில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள நான்கு உதவியுடன் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த புகைப்படம் தற்போது பொதுவில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் கருப்பு மற்றும் வெள்ளை புள்ளிகள் உள்ளது. இந்த புள்ளிகள் சாதாரண நட்சத்திரங்கள் கிடையாது என்றும் நட்சத்திரங்களின் தொகுப்பு என்றும் கூறப்பட்டுள்ளது. இது பூமியில் இருந்து பார்த்தால் இந்த அளவிற்கு தெரியாது ஆனால் இந்த டெஸ் சாதனம் இதை துல்லியமாக படம்பிடித்து காட்டியுள்ளது என்று நாசா விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து