முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனா ஓபன் பேட்மிண்டன்: பிவி சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்

வியாழக்கிழமை, 20 செப்டம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

பெய்ஜிங் : சீனா ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை பிவி சிந்து தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

எளிதில் வெற்றி

சீனா ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை பிவி சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தாய்லாந்தின் பூசனன் ஒங்பம்ரங்பனை எதிர்கொண்டார். முதல் சுற்றில் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் விளையாடினார்கள். இதனால் மாறிமாறி புள்ளிகள் பெற்றனர். இறுதியில் தாய்லாந்து வீராங்கனை 23-21 என முதல் செட்டை கைப்பற்றினார்.

கடும் நெருக்கடி

பின்னர் சுதாரித்துக் கொண்ட பிவி சிந்து 21-13 என 2-வது செட்டை எளிதில் கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் தாய்லாந்து வீராங்கனை பிவி சிந்துவிற்கு கடும் நெருக்கடி கொடுத்தார். என்றாலும் பிவி சிந்து 21-18 என கைப்பற்றி காலிறுதிக்கு முன்னேறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து