முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீதிபதி ரவீந்தர் ரெட்டி பா.ஜ.க.வில் இணைகிறார் ஐதராபாத் குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பளித்தவர்

சனிக்கிழமை, 22 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ஐதராபாத்,ஐதராபாத்தின் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அத்தனை பேரையும் விடுவித்து தீர்ப்பளித்த நீதிபதி பா.ஜ.க.வில் இணையப் போகிறார்.

இந்த நீதிபதியின் பெயர் ரவீந்தர் ரெட்டி. தற்போது தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். இவர் ஐதராபாத் பெருநகர செஷன்ஸ் நீதிபதியாக இருந்தவர். கடந்த ஏப்ரல் 16-ம் தேதி இவர் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பளித்தார். அப்போது சாமியார் அசீமானந்த் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட 5 பேரையும் விடுதலை செய்து  தீர்ப்பளித்தார்.தீர்ப்பளித்த கையோடு தனது பதவியை ராஜினாமா செய்து ஐகோர்ட் தலைமை நீதிபதிக்கும் கடிதம் எழுதி விலகினார். இந்த நிலையில் தற்போது இவர் பா.ஜ.க.வில் இணையவுள்ளார். பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவை இவர் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது தெலுங்கானா பா.ஜ.க. தலைவர் டாக்டர் கே.லட்சுமணும் உடன் இருந்தார். அந்த சமயத்தில்தான் தான் பா.ஜ.க.வில் இணையவுள்ளதாக நீதிபதி தெரிவித்தார் .

கடந்த 2007-ம் ஆண்டு மே மாதம் 18-ம் தேதி மெக்கா மசூதியில் குண்டு வெடித்தது. இந்த வழக்கில் சுவாமி அசீமானந்த் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. ஆனால் அனைவரையும் விடுவித்த நீதிபதி ரெட்டி, யாரா் மீதான குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்று கூறியிருந்தார். ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் என்பதற்காக அவரை தீவிரவாதத்தில் ஈடுபடுவர் என்று கூற முடியாது என்றும் நீதிபதி தனது தீர்ப்பின் போது தெரிவித்திருந்தார். ரெட்டி பதவியில் இருந்த போது அவர் மீது சில சர்ச்சைகளும் இருந்தன. அதுதொடர்பாக ஆந்திர மாநில ஐகோர்ட் விசாரணையும் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து